Dailyhunt

டி20 போட்டிகளில் இளம் இந்திய வீரராக ரவி பிஷ்னாய் நிகழ்த்திய மாபெரும் சாதனை - விவரம் இதோ

Crictamil 2 weeks ago

கமதாபாத் நகரில் நேற்று நடைபெற்ற நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான ஒன்பதாவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தியது இதன் மூலம் குஜராத் அணி இந்த தொடரில் தங்களது இரண்டாவது தோல்வியை பதிவு செய்தது.

ரவி பிஷ்னாய் நிகழ்த்திய அசத்தல் சாதனை :

இந்த போட்டியின் போது டாசில் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்களை குவித்தது. பின்னர் 211 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் மட்டுமே குவித்தது.

இதன்காரணமாக 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ரவி பிஷ்னாய் 4 ஓவர்களை வீசி 41 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இதன் மூலம் இந்த போட்டிக்கான ஆட்டநாயகன் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் அவர் இன்றைய போட்டியில் எடுத்த விக்கட்டுகளின் மூலம் டி20 போட்டிகளில் முதல் இந்திய வீரராக மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இந்த போட்டியில் கிளென் பிலிப்ஸை வீழ்த்தியதன் மூலம் டி20 போட்டிகளில் ஒட்டுமொத்தமாக அவர் தனது 200-வது விக்கெட்டை பதிவு செய்தார்.

ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் கேப்டன் சுப்மன் கில் விளையாடாதது ஏன்? - விவரம் இதோ

இது டி20 போட்டிகளில் அவரது 170-வது போட்டியாகும். இதன்மூலம் குறைந்த வயதில் 200 விக்கெட்டுகளை டி20 போட்டிகளில் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ரவி பிஷ்னாவுக்கு தற்போது 25 ஆண்டுகள் 211 நாட்கள் ஆகிறது. இதன் மூலம் குறைந்த வயதில் 200 விக்கெட்டுகளை டி20 போட்டியில் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Crictamil