Dailyhunt

எங்கயோ போக வேண்டியே ஸ்கோர்.. இறுதியில் நாங்க பெற்ற வெற்றிக்கு இவர்களே காரணம் - சூரியகுமார் யாதவ் மகிழ்ச்சி

Crictamil 1 week ago

மே 4-ஆம் தேதியான நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 47-வது லீக் போட்டியானது நடைபெற்று முடிந்தது.

இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதிய வேளையில் இந்த போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது.

லக்னோ அணியை வீழ்த்தியது குறித்து பேசிய : சூரியகுமார் யாதவ்

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்களை குவித்தது. பின்னர் 229 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 229 ரன்களை குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய சூர்யகுமார் யாதவ் கூறியதாவது : உண்மையிலேயே சொல்ல வேண்டும் என்றால் இந்த போட்டியில் லக்னோ அணியின் வீரர்கள் அதிரடியாக துவங்கியிருந்தனர். அதன் காரணமாக நிச்சயம் நிறைய ரன்கள் செல்லும் என்று எதிர்பார்த்தோம். பவர்பிளே ஓவர்களில் இருந்து முதல் 10 ஓவர் வரை அவர்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

அதன் பின்னர் எங்களது பந்துச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தி அவர்களை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது மிகச் சிறப்பாக இருந்தது. பந்துவீச்சாளர்கள் தங்களது சிறப்பான செயல்பாட்டை இந்த போட்டியில் வெளிப்படுத்தி அவர்களை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது உண்மையிலேயே ஒரு அற்புதமான செயல்பாடாக நான் பார்ப்பேன். பின்னர் நிச்சயம் இந்த மைதானத்தில் 230 ரன்கள் வரை சேசிங் செய்ய முடியும் என்ற நம்பிக்கையும் இருந்தது.

எப்படி ஸ்டார்ட் பண்ணோம்.. இப்படி ஆயிடுச்சி.. மும்பை அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு - ரிஷப் பண்ட் வருத்தம்

அந்த வகையில் ரிக்கல்டன் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த போட்டியில் ரோஹித் சர்மா விளையாடிய விதம் ரசிகர்களை மகிழ்வித்தது. அவர் ஒரு நம்ப முடியாத ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதியில் இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சி என சூர்யகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Crictamil