Dailyhunt

எப்படி ஸ்டார்ட் பண்ணோம்.. இப்படி ஆயிடுச்சி.. மும்பை அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு - ரிஷப் பண்ட் வருத்தம்

Crictamil 1 week ago

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நேற்று வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 47-வது லீக் போட்டியில் விளையாடியிருந்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியானது மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியிருந்தது.

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 228 ரன்களை குவித்தது .

மும்பை அணிக்கெதிரான தோல்வி குறித்து : ரிஷப் பண்ட் பேச்சு

பின்னர் 229 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 229 ரன்களை குவித்து அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கூறியதாவது :

நிச்சயமாக இந்த போட்டியில் நாங்கள் நிறைய ரன்களை குறைவாக எடுத்து விட்டோம் என்று நினைக்கிறேன். ஏனெனில் இந்த போட்டியை நாங்கள் மிக அதிரடியாக துவங்கினோம். அதனால் நிறைய ரன்கள் முதல் 10 ஓவர்களுக்குள் வந்தது. ஆனால் அதன்பிறகு ரன்கள் வரவில்லை அது எங்களுக்கு பெரிய பின்னடைவாக மாறியது. இருந்தாலும் இது ஒரு பாசிட்டிவான விடயம் தான். அதனால் வீரர்களை குறை சொல்ல ஒன்றும் இல்லை. வீரர்கள் சுதந்திரமாக விளையாட வேண்டும் என்று விரும்பினோம்.

கடைசி நேரத்தில் மும்பை அணியின் பந்துவீச்சாளர்கள் மைதானத்தின் தன்மையை பயன்படுத்தி எங்களை பெரிய ரன் குவிப்பிற்கு செல்லாமல் தடுத்து விட்டனர். நிச்சயம் இந்த போட்டியில் 10 முதல் 15 ரன்கள் வரை நாங்கள் குறைவாக எடுத்து விட்டோம் என்று நினைக்கிறேன். அதேவேளையில் 220 முதல் 230 ரன்கள் வரை இந்த மைதானத்தில் எளிதாக சேசிங் செய்ய முடியும். அந்த வகையிலேயே மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களும் மிகச்சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளனர்.

மாபெரும் சாதனையுடன் லக்னோ அணியை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணி - விவரம் இதோ

எங்களது பந்துவீச்சாளர்கள் மீது குறை சொல்ல முடியாது. ஏனெனில் அவர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி இருக்கின்றனர். இதுபோன்ற போட்டிகளில் எந்த அணி வேண்டுமென்றாலும் வெற்றி பெறலாம். அதற்கு அதிர்ஷ்டம் நிச்சயம் நம் பக்கம் இருக்க வேண்டும். இந்த தோல்வியிலிருந்து நிறைய பாடங்களை கற்றுக் கொண்டுள்ளோம் என்றும் ரிஷப் பண்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Crictamil