Dailyhunt

இந்த 2026 ஐ.பி.எல் தொடரில் ஜஸ்ப்ரீத் பும்ராவின் தடுமாற்றத்திற்கு இதுவே காரணம் - ரவி சாஸ்திரி கருத்து

Crictamil 5 days ago

ந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா நடைபெற்று முடிந்த 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய பங்களிப்பை வழங்கி இருந்தார்.

அவரது இந்த சிறப்பான செயல்பாடு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரிலும் தொடரும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் பும்ரா சுமாராகவே பந்துவீசி வருகிறார்.

பும்ராவின் சறுக்கலுக்கு இதுவே காரணம் : ரவி சாஸ்திரி

இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 10 லீக் ஆட்டங்களில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியானது வெறும் 3 வெற்றிகளை மட்டுமே பெற்று பின்னடைவை சந்தித்துள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு அவர்கள் பிளே ஆப் சுற்றை எட்டும் வாய்ப்பும் தற்போது கடினமாக மாறியுள்ளது. மும்பை அணியின் இந்த தடுமாற்றத்திற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் ஒரு காரணமாக ஜஸ்ப்ரீத் பும்ராவின் சுமாரான பார்மும் பார்க்கப்படுகிறது.

ஏனெனில் இதுவரை இந்த தொடரில் 10 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 3 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். இந்த விவகாரம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் ஜஸ்ப்ரீத் பும்ராவின் தடுமாற்றத்திற்கு காரணம் என்ன? என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :

பும்ரா கடந்த 12 மாதங்களாக இந்திய அணிக்காக தொடர்ச்சியாக விளையாடி விட்டு தற்போது இந்த ஐபிஎல் தொடரிலும் ஓய்வின்றி விளையாடி வருகிறார். அவரது தடுமாற்றத்திற்கு காரணமே தற்போது பும்ரா உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சோர்வில் இருக்கிறார். அவருக்கு சரியான ஓய்வு வழங்க வேண்டியது அவசியம். மும்பை அணியின் நிர்வாகம் அவரை அக்கறையுடன் கவனித்துக் கொள்ள வேண்டும். ஓய்வின்றி அதிக பணிச்சுமையுடன் விளையாடுவதால் தான் பும்ரா தற்போது தனது உச்சகட்ட பார்மில் இருந்து சறுக்கியுள்ளார்.

கே.எல் ராகுலை தாண்டியாச்சி.. ஒரே போட்டியில் 2 வீரர்களிடம் இடம்மாறிய ஆரஞ்சு தொப்பி - விவரம் இதோ

மேலும் இன்னும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்திய அணிக்கு நெருக்கடியான பல போட்டி அட்டவணைகள் உள்ளன. பல முக்கிய டெஸ்ட் தொடர்கள், 50 ஓவர் உலககோப்பை என அடுத்தடுத்து பெரிய பெரிய தொடர்கள் இருப்பதால் அவரது பணிச்சுமையை கவனிக்க வேண்டியது அவசியம் என ரவி சாஸ்திரி கூறியது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Crictamil