Dailyhunt

இவரை எப்படி கேப்டனாக போட்டீங்க? ரியான் பராக் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த - சஞ்சய் மஞ்சரேக்கர்

Crictamil 1 week ago

ல ஆண்டுகளாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த சஞ்சு சாம்சன் கடந்த ஆண்டு அந்த அணியின் நிர்வாகத்துடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக அந்த அணியில் இருந்து வெளியேற முன்வந்தார்.

இதன் காரணமாக மினி ஏலத்திற்கு முன்னதாகவே அவரை பல்வேறு அணிகள் டிரேடிங் முறையில் தங்களது அணிக்கு கொண்டு வர முயற்சித்தன. அப்படி நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியோரை ராஜஸ்தான் அணிக்கு விட்டுக் கொடுத்து சஞ்சு சாம்சனை தங்களது அணிக்குள் கொண்டு வந்தது. இதன் காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்பட வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.

ரியான் பராக் மீது பல விமர்சனங்களை முன்வைத்த : சஞ்சய் மஞ்சரேக்கர்

அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இடம் மாறிய அனுபவ வீரரான ரவீந்திர ஜடேஜா கேப்டனாக மாறுவார் என்று பலரும் கூறியிருந்தனர். அதேவேளையில் இளம் வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வாலும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜுரேலும் கேப்டன் பதவிக்கு போட்டியில் இருந்தார்கள் என்றெல்லாம் அப்போது பேசப்பட்டு வந்தது. ஆனால் அவர்களை எல்லாம் தாண்டி ரியான் பராக்கிற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புதிய கேப்டன் பதவியை வழங்கியது. அப்படி அவர் கேப்டன் பதவியை பெற்றது அப்போதே பெரியளவில் விமர்சனத்தை பெற்றிருந்தது.

இவ்வேளையில் நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தொடர்ந்து மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் பராக் இந்த தொடரில் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்து இருக்கும் வேளையில் அவரது கேப்டன்சியும் அனுபவம் இல்லாமல் இருப்பதால் ராஜஸ்தான் அணி சற்று தடுமாறி வருகிறது. இவ்வேளையில் சஞ்சு சாம்சனை வெளியேற்றியதற்கு பிறகு ரியான் பராக்கை கேப்டனாக நியமித்தது தவறு என்றும் அவரது கேப்டன்சியில் பல்வேறு கேள்விகள் உள்ளதாகவும் இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சரேக்கர் பல விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறியதாவது : என்னை பொறுத்தவரை ரியான் பராக்கை போன்ற ஒரு வீரர் ரன் எடுக்க திணறினாலும் அவரை தொடர்ந்து நிர்வாகம் ஏன் ஆதரிக்கிறது? என்பது புரியவில்லை. அதேபோன்று அவருக்கு ஏன் கேப்டன் பதவியை கொடுத்திருக்கிறது? என்பதும் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. 2024 ஐபிஎல் சீசனில் 573 ரன்கள் அவர் குவித்தது சிறப்பாக இருந்தது. ஆனால் பல ஆண்டுகளாக அணியை வழிநடத்தி வந்த சஞ்சு சாம்சன் இடமாற்றம் செய்யப்பட்ட பிறகு அனுபவ வீரரான ஜடேஜாவிற்கு தான் கேப்டன் பதவி வழங்கியிருக்க வேண்டும்.

ஆர்.சி.பி ரசிகர்களுக்கு ஏமாற்றம்.. இறுதிப்போட்டிக்கான மைதானத்தை மாற்றிய பி.சி.சி.ஐ - விவரம் இதோ

அதை தவிர்த்து பெரியளவில் சாதிக்காத ரியான் பராக்கிற்கு ஏன் கேப்டன் பதவி வழங்கினார்கள்? என்று தெரியவில்லை. இவ்வளவு பெரிய வெகுமதி பெறும் அளவிற்கு அவர் என்ன செய்துவிட்டார் என்பதும் எனக்கு தெரியவில்லை. அதுமட்டும் இன்றி அதிகப்படியான தன்னம்பிக்கையை காட்டுகிறேன் என்று ரியான் பராக் செய்யும் பல விடயங்கள் கர்வமாக தோன்றுகின்றன. இப்படி பல்வேறு கேள்விகள் எனக்கு ரியான் பராக் மீது இருப்பதாகவும் சஞ்சய் மஞ்சரேக்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Crictamil