Dailyhunt

இவ்ளோ தூரம் இந்த மேட்ச்ச கொண்டு போனதே பெரிய விடயம்.. தோல்விக்கு பிறகு - ரஜத் பட்டிதார் பேச்சு

Crictamil 2 weeks ago

ந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 42-வது லீக் போட்டியானது நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்று முடிந்தது.

இந்த போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

இந்த போட்டியை இவ்வளவு தூரம் கொண்டு சென்றதே பெருசு : ரஜத் பட்டிதார்

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது குஜராத் அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 155 ரன்கள் மட்டுமே குவித்தது. பெங்களூரு அணி சார்பாக அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 40 ரன்களையும், விராட் கோலி 28 ரன்களையும் குவித்தனர்.

பின்னர் 156 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணியானது 15.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது குஜராத் அணி சார்பாக அதிகபட்சமாக சுப்மன் கில் 43 ரன்களையும், ஜாஸ் பட்லர் 39 ரன்களையும் குவித்தனர்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து வருத்தம் தெரிவித்த பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் கூறியதாவது : இந்த போட்டியில் நாங்கள் வெற்றிக்கு தேவையான ரன்களை அடிக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறோம். ஆனாலும் இந்த போட்டியை 15-16 ஓவர் வரை கொண்டு சென்றதே சிறப்பான ஒன்று. அது எங்களுக்கு பாசிட்டிவ்வான விடயமாக பார்க்கிறேன். புற்கள் நிறைந்த இந்த மைதானத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நல்ல சாதகம் கிடைத்தது. அந்த வகையிலேயே குஜராத் அணியின் பந்துவீச்சாளர்கள் எங்களை கட்டுப்படுத்தினர்.

2 ஆவது இந்திய பந்துவீச்சாளராக டி20 போட்டிகளில் மாபெரும் சாதனை நிகழ்த்திய - புவனேஷ்வர் குமார்

சுப்மன் கில் பவர்பிளே ஓவர்களில் மிகச்சிறப்பாக விளையாடி எங்கள் மீது அழுத்தத்தை போட்டார். இருப்பினும் அதைமீறி வந்து 16 ஓவர் வரை போட்டியை கொண்டு சென்றுள்ளோம். இந்த போட்டியில் மிடில் ஓவர்களில் அடுத்தடுத்து நாங்கள் விக்கெட்டுகளை இழந்ததே எங்களது பின்னடைவுக்கு காரணமாக பார்க்கிறேன். புவனேஸ்வர் குமார் அவருடைய அனுபவத்தை பயன்படுத்தி இந்த போட்டியில் அற்புதமாக பந்துவீசி இருந்தார் என்றும் ரஜத் பட்டிதார் கூறியது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Crictamil