மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 69-வது லீக் போட்டியானது நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி நான்காவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
மேக்ஸ்வெல்லின் சாதனையை சமன் செய்த ரோஹித் சர்மா :
அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை குவிக்க பின்னர் 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி விளையாடும் போது துவக்க வீரராக களம் இறங்கிய ரோகித் சர்மா டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.
அந்தவகையில் 4 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய பந்தில் துருவ் ஜுரேலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இப்படி அவர் இந்த போட்டியில் டக் அவுட்டானதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் கிளென் மேக்ஸ்வெல்லின் மோசமான சாதனை ஒன்றினை சமன் செய்துள்ளார். அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் ரோகித் சர்மா நிகழ்த்திய அந்த மோசமான சாதனை யாதெனில் : இந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் அடைந்த டக் அவுட்டோடு சேர்த்து இதுவரை ஐபிஎல் கரியரில் 19 முறை டக் அவுட்டாகியுள்ளார். இதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் அதிகமுறை டக் அவுட்டான வீரர் என்ற பட்டியலில் முதலிடத்தில் இருந்த மேக்ஸ்வெல்லை அவர் சமன் செய்துள்ளார்.
மும்பையை வீழ்த்தினாலும் நாங்க செய்ய வேண்டிய வேலை இன்னும் நிறைய இருக்கு - ரியான் பராக் பேச்சு
ஐபிஎல் போட்டிகளில் பொருத்தவரை மேக்ஸ்வெல் 19 முறை டக் அவுட்டாகியிருந்த வேளையில் அவரை ரோஹித் சர்மா தற்போது சமன் செய்துள்ளார். இவர்கள் இருவருக்கு அடுத்து தினேஷ் கார்த்திக் மற்றும் சுனில் நரேன் ஆகியோர் 18 முறையும், அதற்கடுத்து பியூஷ் சாவ்லா மற்றும் ரஷீத் கான் ஆகியோர் 16 முறையும் டக் அவுட்டாகி அடுத்தடுத்த இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
