இந்தியாவில் நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 47-வது லீக் போட்டியானது நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
மாபெரும் சாதனையுடன் வெற்றி மும்பை இந்தியன்ஸ் :
அதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்களை குவித்தது. லக்னோ அணி சார்பாக அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரான் 63 ரன்களையும், மிட்சல் மார்ஷ் 44 ரன்களையும் குவித்தனர்.
பின்னர் 229 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி மும்பை இந்தியன்ஸ் அணியானது லக்னோ அணியின் பந்துவீச்சை சிதறடித்து 18.4 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்களை குவித்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக ரோகித் சர்மா 84 ரன்களையும், ரிக்கல்டன் 83 ரன்களையும் குவித்தனர்.
இந்நிலையில் நேற்று பெற்ற இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியானது இந்த தொடரில் தங்களது மூன்றாவது வெற்றியை பெற்று புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்தது. அதோடு இந்த வெற்றியின் மூலம் மாபெரும் சாதனை ஒன்றினையும் மும்பை அணி நிகழ்த்தியுள்ளது.
டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான அடுத்த போட்டியையும் தவறவிடும் எம்.எஸ் தோனி - காரணம் என்ன?
அதாவது ஐ.பி.எல் வரலாற்றில் மும்பை அணி பெற்ற மிகப்பெரிய சேசிங் வெற்றியாக இந்த போட்டி சாதனை நிகழ்த்தியுள்ளது. ஏற்கனவே இந்த ஆண்டு கொல்கத்தா அணிக்கு எதிராக 221 ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்த மும்பை அணி தற்போது லக்னோ அணிக்கு எதிராக 229 ரன்கள் சேசிங் செய்து ஐ.பி.எல் போட்டிகளில் தங்களது அதிகபட்ச சேசிங் சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
