Dailyhunt

முகமது ஷமிக்கு இந்த வாய்ப்பை நீங்க கொடுத்தே ஆகனும்.. குரல் குடுத்த சவுரவ் கங்குலி - விவரம் இதோ

Crictamil 4 days ago

ந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி கடந்த 2013 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 64 டெஸ்ட் போட்டிகள், 108 ஒருநாள் போட்டிகள் மற்றும் 25 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

மூன்று வகையான இந்திய அணிலும் இடம் பெற்று விளையாடிய முகமது ஷமி இந்திய அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளராக பார்க்கப்படும் வேளையில் காயம் காரணமாக கடல் சில ஆண்டுகளாகவே அவர் சறுக்கலை சந்தித்து வருகிறார்.

முகமது ஷமி குறித்து ஆதரவாக பேசிய : சவுரவ் கங்குலி

தற்போது 35 வயதாகும் முகமது ஷமி மிகச்சிறப்பான ஃபார்மில் இருந்தும் அவரை இந்திய அணி தேர்வு செய்யாமல் இருந்து வருவது விமர்சனத்தை சந்தித்து வருகிறது. டெஸ்ட் போட்டிகளில் 2023 ஆம் ஆண்டுக்கு பின்னர் இடம்பெறாத அவர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கடந்த ஆண்டு இந்திய அணிக்காக விளையாடிருந்தார். ஆனாலும் அவரது வயதை கணக்கில் காட்டி இந்திய அணி அவரை நிராகரித்து வருகிறது.

இருப்பினும் உள்ளூர் போட்டிகள் ரஞ்சி தொடர் என அனைத்திலும் அசத்தும் முகமது ஷமி தொடர்ந்து தனது இடத்திற்காக போராடி வருகிறார். தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 2026 ஐபிஎல் தொடரிலும் அட்டகாசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் அவர் மிகச் சிறப்பான பந்துவீச்சால் பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறார். இந்நிலையில் இந்திய தேசிய அணியில் மீண்டும் ஷமி இடம்பெற வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சௌரவ் கங்குலி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் அவர் கூறியதாவது : பும்ராவுடன் முகமது ஷமி இணைந்து பந்து வீசவேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் அந்த அளவிற்கு அவர் ஒரு மிகச்சிறப்பான பந்துவீச்சாளர். சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த போட்டியில் 4 ஓவர்களில் 9 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளதை நாம் பார்த்துள்ளோம்.

3 ஓவர் தான் பவர்பிளே.. அதுல என்னோட பிளான் இதுதான் - ஆட்டநாயகன் ஜெய்ஸ்வால் பேட்டி

இப்படி ஒரு மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தும் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்காதது தவறு. ரஞ்சிகோப்பை தொடரிலும் அவர் பெங்கால் அணிக்காக 37 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் எனவே விரைவில் அவரை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்றும் கங்குலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Crictamil