Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

மும்பை அணியிலிருந்து வெளியேறும் முடிவை ஏற்கனவே எடுத்த ஹார்டிக் பாண்டியா - காரணம் என்ன?

Crictamil 3 weeks ago

டந்த 2024-ஆம் ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹார்டிக் பாண்டியாவை டிரேடிங் முறையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைத்த அந்த அணியின் நிர்வாகம் அவருக்கு கேப்டன் பதவியையும் வழங்கியது.

ரோகித் சர்மா கேப்டன் பதிவிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹார்டிக் பாண்டியா கொண்டுவரப்பட்டது அப்போதே ரசிகர்கள் மத்தியில் பெறும் விமர்சனத்தை சந்தித்தது. ஆனாலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு ஹார்டிக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அந்த அணியின் நிர்வாகம் விளக்கமளித்து இருந்தது.

மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து வெளியேற முடிவு செய்த ஹார்டிக் பாண்டியா :

ஆனால் அந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐ.பி.எல் தொடரில் பிளே ஆப் சுற்று வரை முன்னேறிய மும்பை அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்தது. அதற்கு அடுத்து 2025 ஆம் ஆண்டு மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய மும்பை அணி இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் தொடரிலும் 14 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை மட்டுமே பெற்று 8 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தை பிடித்து வெளியேறியது.

இதன் காரணமாக மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியின் மீதும், கேப்டன் ஹார்திக் பாண்டியா பாண்டியாவின் மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் இந்த 2026 ஐபிஎல் தொடர் முடியும் முன்னதாகவே இந்த தொடரின் பாதியிலேயே மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து விலகுவதாக கேப்டன் ஹார்திக் பாண்டியா முடிவு செய்ததாக தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் வெளியான தகவலில் குறிப்பிடப்பட்டதாவது :

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் போது தொடர் தோல்விகளால் ஹர்திக் பாண்டியா கடுமையான மன உளைச்சலுக்கும், முழுமையான சோர்வுக்கும் உள்ளாகி இருந்தார். அதோடு முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்ட அவர் இனி தான் மும்பை அணியில் நீடிக்கப்போவதில்லை என்ற முடிவையும் தொடரின் பாதியிலேயே நிர்வாகத்திடம் தெரிவித்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது.

அதோடு கடந்த மூன்று ஆண்டுகளாக அவருக்கு எதுவும் எளிதாக இருக்கவில்லை என்றும் முன்பு இருந்த மும்பை இந்தியன்ஸ் அணி போல் தற்போது அணியில் ஒற்றுமை இல்லை என்றும் சீனியர் வீரர்கள் வெவ்வேறு மனநிலையில் இருந்தனர் என்றும் ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சாதகமான முடிவுகள் கிடைக்காததால் மும்பை இந்தியன்ஸ் அணியுடனான தனது பயணத்தை முடித்துக் கொள்ள விரும்புவதாகவும் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

இப்படி பண்ணா எப்படி ஜெயிக்க முடியும்.. குஜராத் அணிக்கெதிரான தோல்விக்கு பின்னர் - ரியான் பராக் பேச்சு

அதனால் அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஹார்டிக் பாண்டியா வேறு அணிக்கு செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக நிச்சயம் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு நிச்சயம் ஹார்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து வெளியேறி வேறொரு அணிக்கு செல்வார் என்பது உறுதி.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Crictamil