Dailyhunt

மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து லக்னோ அணிக்கு வந்தது ஏன்? - அர்ஜுன் டெண்டுல்கர் விளக்கம்

Crictamil 1 week ago

ந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடி வந்த வேளையில் அந்த அணியில் இடம் கிடைக்காமல் தற்போது கோவா அணிக்காக விளையாடி வருகிறார்.

ஐபிஎல் போட்டிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே அவர் இடம் பிடித்து வந்தாலும் பிளேயிங் லெவனில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருகிறது. குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணியில் பல ஆண்டுகளாக அவர் இடம்பிடித்து வந்தார். ஆனாலும் கடந்த 2023-24 ஆண்டுகளில் அவருக்கு வெறும் 5 வாய்ப்புகள் மட்டுமே வழங்கப்பட்டது. அப்படி 5 போட்டிகளில் விளையாடிய அவர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

லக்னோ அணிக்கு மாறியது ஏன்? : அர்ஜுன் டெண்டுல்கர்

எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படாத அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் பெஞ்சிலேயே அமர வைக்கப்பட்டு வந்த வேளையில் கடந்த ஆண்டு நடைபெற்ற மினி ஏலத்தின் போது மும்பை இந்தியன்ஸ் அணியானது டிரேடிங் முறையில் அவரை லக்னோ அணிக்கு விற்றது. இதன் காரணமாக 2026 ஐபிஎல் தொடருக்கான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இணைந்துள்ள அர்ஜுன் டெண்டுல்கர் அங்கு தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

நிச்சயம் இந்த சீசனில் அவருக்கு சில வாய்ப்புகள் லக்னோ அணியில் வழங்கப்படும் என்றும் தெரிகிறது. வேகப்பந்து வீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் அவர் தற்போது பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேறிய பிறகு லக்னோ அணியில் இணைந்தது குறித்து பிரத்யேக பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அர்ஜுன் டெண்டுல்கர் சில விடயங்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

அந்த வகையில் அவர் கூறியதாவது : எல்லோருமே விளையாட வேண்டும் என்று தான் நினைப்பார்கள். யார் தான் விளையாடாமல் பெஞ்சில் அமர்ந்திருக்க நினைப்பார்கள்? நான் என்னுடைய வாய்ப்புக்காக கடினமாக உழைத்து வருகிறேன். நிச்சயம் எனக்கான வாய்ப்பு வரும் போது சிறப்பாக செயல்பட வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய நினைப்பாக இருக்கிறது. மும்பை அணியில் இருந்து இங்கு நான் ஒரு புதிய அணிக்காக வந்ததிலிருந்து விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

தமிழக வீரர் ஷாருக்கான் விடயத்தில் குஜராத் அணி இந்த முடிவை எடுத்தே ஆகனும் - அம்பத்தி ராயுடு பேச்சு

லக்னோ அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர்களான கால் க்ரோ மற்றும் பரத் அருணிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டு வருகிறேன். இருவரும் எனக்கு சிறப்பான ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள். அதோடு ஜஸ்டின் லாங்கர் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் லேன்ஸ் க்ளுஸ்னர் ஆகியோர் பவர் ஹிட்டிங்கிலும் எனக்கு பல விடயங்களை கற்றுத் தந்துள்ளனர் எனவும் அர்ஜுன் டெண்டுல்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Crictamil