ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 21-வது போட்டியில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணியானது 57 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பெற்றது.
இந்த போட்டியில் முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 216 ரன்களை குவித்து அசத்தியது. இதன் காரணமாக 217 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு ராஜஸ்தான் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.
என்னுடைய இந்த விருதை எனது குடும்பத்திற்கு சமர்ப்பிக்கிறேன் : பிரபுல் ஹிங்கே
அதனை தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் ஓவரிலேயே பெரிய தடுமாற்றத்தை சந்தித்தது. அதாவது இந்த போட்டியில் சன் ரைசர்ஸ் அணி சார்பாக அறிமுக வேகப்பந்து வீச்சாளராக களமிறங்கிய பிரபுல் ஹிங்கே முதல் ஓவரின் இரண்டாவது, நான்காவது மற்றும் ஆறாவது பந்து என மூன்று பந்துகளில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி போட்டியின் ஆரம்பத்திலேயே சன் ரைசர்ஸ் அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார். இப்படி முதல் ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இழந்தது.
பின்னர் தான் வீசிய இரண்டாவது ஓவரில் பிரபுல் ஹிங்கே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியன் கேப்டன் ரியான் பராக்கையும் வீழ்த்தவே நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ராஜஸ்தான் அணி 9 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்ததால் அந்த அணியால் அந்த சரிவிலிருந்து மீண்டு வர முடியவில்லை. இந்த போட்டியில் அறிமுகமாக பந்துவீச்சாளராக விளையாடிய பிரபுல் ஹிங்கே 4 ஓவர்கள் வீசி 34 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
அவரது இந்த சிறப்பான செயல்பாடு காரணமாகவே ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றதால் அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தனது சிறப்பான செயல்பாடு குறித்து பேசிய ஆட்டநாயகன் பிரபுல் ஹிங்கே கூறியதாவது : உண்மையிலேயே இந்த அறிமுக போட்டியில் நான் நான்கு முதல் ஐந்து விக்கெட்டுகளை எடுப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஏனெனில் என்னால் நிச்சயம் பவர்பிளே ஓவர்களில் டாமினேட் செய்து பந்து வீசமுடியும் என்கிற நம்பிக்கை என்னிடம் இருக்கிறது.
அந்த வகையிலே நான் சிறப்பாக பந்துவீசி இருக்கிறேன். 13 வயதிலிருந்து நான் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறேன். என்னுடைய இந்த பயணத்தில் எனது குடும்பம் நிறைய தியாகங்களை செய்திருக்கிறது. அதனால் இந்த ஆட்டநாயகன் விருதினை அவர்களுக்காக சமர்ப்பிக்கிறேன். இந்த போட்டியில் என்னுடைய பெஸ்ட் விக்கெட் வைபவ் சூர்யவன்ஷியின் விக்கெட் தான்.
சரியான நேரத்தில் எல்லாம் சரியாக நடந்தது.. ராஜஸ்தான் அணியை வீழ்த்திய பிறகு - இஷான் கிஷன் மகிழ்ச்சி
ஏனெனில் அவர் இருக்கும் பார்மில் அவரை முதல் பந்தியிலேயே வீழ்த்த வேண்டும் என இரண்டு பேரிடம் சொல்லிவிட்டு தான் நான் களத்திற்கு சென்றேன். அந்த வகையிலே முதல் பந்தில் வைபவ் சூர்யவன்ஷியை ஆட்டமிழக்க வைத்தது மிகவும் மகிழ்ச்சி. இனிவரும் போட்டிகளிலும் என்னுடைய இந்த சிறப்பான பந்துவீச்சு தொடரும் என பிரபுல் ஹிங்கே கூறியது குறிப்பிடத்தக்கது.
