Dailyhunt

முதல் வேகப்பந்து வீச்சாளராக ஐ.பி.எல் போட்டிகளில் மாபெரும் சாதனை நிகழ்த்திய - புவனேஷ்வர் குமார்

Crictamil 3 weeks ago

ர்.சி.பி அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான புவனேஸ்வர் குமார் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 11-வது போட்டியில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி பெங்களூர் அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் 4 ஓவர்களை வீசிய அவர் 41 ரன்கள் விட்டு கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

புவனேஷ்வர் குமார் நிகழ்த்திய அசத்தல் சாதனை :

அப்படி அவர் எடுத்த 3 விக்கெட்டுகளின் மூலம் ஐபிஎல் போட்டிகளில் மாபெரும் சாதனையை முதல் வேகப்பந்து வீச்சாளராக நிகழ்த்தியுள்ளார். அதுகுறித்த தகவல் தற்போது வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் புவனேஷ்வர் குமார் நிகழ்த்திய மாபெரும் சாதனை யாதெனில் :

நேற்றைய போட்டியின் போது சி.எஸ்.கே அணியின் இளம் வீரரான ஆயுஷ் மாத்ரேவின் விக்கெட்டை அவர் வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் தனது 200-ஆவது விக்கெட்டை பதிவு செய்தார். இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.

கடந்த 2011-ஆம் ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளில் அறிமுகமான புவனேஸ்வர் குமார் 192 போட்டிகளில் விளையாடி 202 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 36 வயதான புவனேஸ்வர் குமார் இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டு பல ஆண்டுகளாகி இருந்தாலும் இன்றளவும் ஐபிஎல் போட்டிகளில் மிக முக்கியமான பந்துவீச்சாளராக திகழ்ந்து வருகிறார்.

ரோஹித் சர்மாவின் மாபெரும் சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்த விராட் கோலி - விவரம் இதோ

அவரது பந்துவீச்சு இன்றளவும் மிகச் சிறப்பாக இருந்து வருவதால் அவர் இந்திய அணியில் இடம் பிடிக்காதது பலரது மத்தியிலும் கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது. அதோடு கடந்த ஆண்டு ஆர்.சி.பி அணி சாம்பியன் பட்டத்தை வெல்லவும் மிக முக்கிய காரணமாக புவனேஷ்வர் குமார் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Crictamil