Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

நானும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணியிருந்தா நிச்சயம் அடிச்சிருக்கலாம்.. தோல்விக்கு பிறகு - சி.எஸ்.கே கேப்டன் வருத்தம்

Crictamil 1 month ago

ந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 11-வது லீக் போட்டியானது நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற சென்னை அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

ஆர்.சி.பி அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு : ருதுராஜ் கெய்க்வாட் பேச்சு

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 250 ரன்களை குவித்து அசத்தியது. ஆர்.சி.பி அணி சார்பாக அதிகபட்சமாக டிம் டேவிட் 70 ரன்களையும், தேவ்தத் படிக்கல் 50 ரன்களையும் குவித்து அசத்தினர்.

பின்னர் 251 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணியானது பெங்களூரு அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக பெங்களூர் அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய சி.எஸ்.கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேசுகையில் கூறியதாவது : உண்மையிலேயே இந்த போட்டியில் எங்களது அணியின் வீரர்கள் மிகச் சிறப்பான போட்டியை வெளிப்படுத்தினர். சர்பராஸ் கான், பிரசாந்த் வீர், ஜேமி ஓவர்டன் மற்றும் ஷிவம் துபே ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடினர்.

சேவாக் மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு அடுத்து 3 ஆவது இந்திய வீரராக சமீர் ரிஸ்வி - நிகழ்த்திய சாதனை

டாப் ஆர்டரில் நாங்களும் கொஞ்சம் சிறப்பாக விளையாடியிருந்தால் நிச்சயம் இந்த இலக்கை துரத்தியிருக்க முடியும். டிம் டேவிடின் விக்கெட்டை ஒரு நோபாலால் நாங்கள் இழந்து விட்டோம். அதனை பயன்படுத்தி அவர் மிகச் சிறப்பாக விளையாடிவிட்டார். அவருடைய சிறப்பான ஆட்டத்திற்கு பாராட்டுகள் என ருதுராஜ் கெய்க்வாட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Crictamil