இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் ஒன்பதாவது லீக் போட்டியானது நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்றது.
இந்த போட்டியில் ரஷீத் கான் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியம் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
சுப்மன் கில் விளையாடாதது ஏன்? : காரணம் இதோ
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்களை குவித்தது. அதன்காரணமாக 211 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் மட்டுமே குவித்தது.
அதன்காரணமாக 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றியை பெற்றது. இந்த போட்டியின் போது குஜராத் அணியின் சார்பாக சுப்மன் கில் அல்லாமல் ரஷீத் கான் கேப்டன்சி செய்தார். இப்படி திடீரென சுப்மன் கில் ஒரு போட்டியுடன் அணியிலிருந்து வெளியேறியது ஏன்? என்ற கேள்வி அனைவரது மத்தியில் இருந்தது.
அதற்கு காரணம் யாதெனில் : இந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக அவருக்கு பயிற்சியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாகவே இந்த போட்டியில் அவர் முன்னெச்சரிக்கை காரணாமாக விளையாடவில்லை என்றும் நிச்சயம் அடுத்த போட்டிக்குள் அணிக்குள் திரும்பி விடுவார் என்றும் டாஸின் போதே கேப்டன் ரஷீத் கான் கூறியிருந்தார்.
இந்த 2 இன்னிங்க்ஸை வைத்து அவரை ஜட்ஜ் பண்ணாதீங்க.. சஞ்சு சாம்சனுக்கு - ஸ்டீபன் பிளமிங் ஆதரவு
இந்த 2026 ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்த குஜராத் அணி நேற்றைய ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் தோல்வியை சந்தித்ததால் இந்த தொடரின் தொடர்ந்து தங்களது இரண்டாவது தோல்வியை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
