ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் படுமோசமான செயல்பாட்டை தொடர்ந்து வந்தது.
பாண்டியாவின் தலைமையில் 9 ஆட்டங்களில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது 2 வெற்றிகளை மட்டுமே பெற்றிருந்தது. இவ்வேளையில் நேற்று தங்களது பத்தாவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்த்து விளையாடி இருந்தது. இந்த போட்டியில் சூரியகுமார் யாதவ் தலைமையில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியானது அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி 6 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணியை பின்னுக்கு தள்ளிய : மும்பை இந்தியன்ஸ்
அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் என்கிற பிரம்மாண்ட ரன்களை குவித்தது. லக்னோ அணி சார்பாக அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரான் 63 ரன்களையும், மிட்சல் மார்ஷ் 44 ரன்களையும் குவித்தனர்.
பின்னர் 229 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது லக்னோ அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கி வெறும் 18.4 ஓவர்களின் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 229 ரன்களை குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது மும்பை அணி சார்பாக அதிகபட்சமாக ரோகித் சர்மா 84 ரன்களையும், ரிக்கல்டன் 83 ரன்களையும் குவித்தனர். இந்த வெற்றியின் மூலம் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி 10 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் ஒன்பதாவது இடத்தில் நீடிக்கிறது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் அணி 200 ரன்களுக்கு மேல் சேசிங் செய்து வெற்றி பெற்றதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளை பின்னுக்கு தள்ளி ஐ.பி.எல் போட்டிகளில் ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது. அந்த வகையில் அவர்கள் நிகழ்த்திய சாதனை யாதெனில் : ஐ.பி.எல் போட்டிகளில் 200-க்கும் மேற்பட்ட இலக்கினை அதிக முறை துரத்திய அணியாக பஞ்சாபின் அணி 11 முறை 200+ இலக்கினை துரத்தி முதலிடத்தில் இருக்கிறது.
அவர்களை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் ஆறு முறை 200+ ரன்களை துரத்தி இரண்டாம் இடத்திலிருந்து வேளையில் நேற்று நடைபெற்ற போட்டியில் 200+ ரன்களை மும்பை அணி துரத்தியதன் மூலம் மும்பை அணி ஏழு முறை 200+ சேசிங் வெற்றியை பதிவு செய்து இந்த பட்டியலில் ஏழு முறையுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
