இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 40 ஆவது லீக் போட்டியானது நேற்று முன்தினம் முல்லன்பூர் நகரில் நடைபெற்றது.
அந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. அந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜஸ்தான் அணி முதல் அணியாக பஞ்சாப் அணியை இந்த தொடரில் வீழ்த்தி அசத்தியது.
ரியான் பராக்குக்கு அபராதம் விதித்த ஐ.பி.எல் நிர்வாகம் :
இந்நிலையில் இந்த போட்டியின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் வீரர்களின் ஓய்வறையில் சக வீரர்களுக்கு மத்தியில் இ-சிகரெட் பிடித்தவாறு இருந்த சில காட்சிகள் இணையத்தில் வைரலாகின. அப்படி இ-சிகரெட் பிடித்த ரியான் பராக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகளும் வலுத்து வந்தன.
மைதானத்தில் போட்டியின் இடையே இப்படி புகைபிடிப்பது தடை செய்யப்பட்டுள்ள வேளையில் ரியான் பராக் செய்த இந்த செயல் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ரியான் பராக் செய்த செயலுக்காக அவர்மீது ஐ.பி.எல் நிர்வாகம் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அந்தவகையில் ரியான் பராக்கிற்கு போட்டி ஊதியத்தில் இருந்து 25% சம்பளத்தை அபராதமாக விதித்துள்ளனர். மேலும் அவரது இந்த ஒழுங்கீனமான செயலுக்காக ஒரு தகுதியிழப்பு புள்ளியையும் வழங்கியுள்ளது. ஏற்கனவே ராஜஸ்தான் நிர்வாகி அண்மையில் செல்போன் பயன்படுத்தி சர்ச்சையை ஏற்படுத்திய வேளையில் தற்போது கேப்டனும் அபராதத்தை பெற்றுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இரண்டாவது அணியாக சன் ரைசர்ஸ் அணி நிகழ்த்திய - மாபெரும் சாதனை
ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது இந்த நடப்பு 2026 ஐ.பி.எல் தொடரில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளை பெற்று 12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
