Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

சன் ரைசர்ஸ் அணியை நாங்க வீழ்த்தியிருந்தாலும் இது பத்தாது - ரியான் பராக் பேச்சு

Crictamil 3 weeks ago

ந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் சுற்று போட்டியானது நேற்று சண்டிகர் நகரில் நடைபெற்றது.

இந்த போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற சன் ரைசர்ஸ் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

சன் ரைசர்ஸ் அணிக்கெதிரான வெற்றிக்கு பிறகு : ரியான் பராக் பேச்சு

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 243 ரன்களை குவிக்க பின்னர் 244 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 196 ரன்களை மட்டுமே குவித்தது இதன் காரணமாக 47 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்று குவாலிஃபயர் இரண்டு போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்து வெற்றி குறித்து பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் கூறியதாவது : இந்த போட்டி அற்புதமான போட்டியாக அமைந்தது. இருந்தாலும் இந்த போட்டியில் நாங்கள் 260 ரன்கள் வரை குவித்திருக்க வேண்டும். போட்டியின் பின் பாதியில் நாங்கள் சரியாக ஸ்கோரை பினிஷ் செய்யவில்லை என்று உணர்கிறோம்.

ஏனெனில் வைபவ் சூர்யவன்ஷி கொடுத்த துவக்கம் மிக அதிரடியான ஒன்று. அவரது அதிரடியான ஆட்டத்திற்கு பிறகு நாங்கள் இன்னும் நிறைய ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். ஆனால் அதைவிட குறைவாக ரன்களை குவித்திருக்கிறோம். இந்த விடயத்தில் நாங்கள் இன்னும் நிறைய யோசிக்க வேண்டி இருக்கிறது.

வைபவ் சூர்யவன்ஷியின் சூறாவளியில் சிக்கி சின்னா பின்னமான ஹைதராபாத் - ராஜஸ்தான் அசத்தல்

அதேபோன்று இரண்டாம் பாதியில் எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு சன் ரைசர்ஸ் அணியை தடுத்து நிறுத்தினர். இந்த வெற்றி எங்களுக்கு திருப்தி அளித்தாலும் பேட்டிங்கில் இன்னும் சில இடங்களில் முன்னேற்றம் தேவைப்படுகிறது. அடுத்த போட்டியில் நிச்சயம் இதேபோன்று சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துவோம் என ரியான் பராக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Crictamil