இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 11-வது லீக் போட்டியானது நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. அந்த வகையில் நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சென்னை அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது :
ஆர்.சி.பி அணி நிகழ்த்திய வரலாற்று சாதனை :
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 250 ரன்கள் குவித்தது. பெங்களூரு அணி சார்பாக அதிகபட்சமாக டிம் டேவிட் 70 ரன்களையும், தேவ்தத் படிக்கல் 50 ரன்கள் குவித்தனர். பின்னர் 251 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணி ஆர்.சி.பி அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ரன்களை மட்டுமே குவித்தது.
இதன் காரணமாக பெங்களூரு அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது விளையாடிய ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது சி.எஸ்.கே அணிக்கு எதிராக முதல் அணியாக ஒரு மாபெரும் வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது.
அந்த வகையில் ஆர்.சி.பி அணி நிகழ்த்திய சாதனை யாதெனில் : இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஐ.பி.எல் போட்டிகளில் அதிக ரன்களை குவித்த அணியாக பஞ்சாப் மற்றும் குஜராத் ஆகிய அணிகள் இருந்தன. கடந்து 2014 ஆம் ஆண்டு பஞ்சாப் அணி சி.எஸ்.கே அணிக்கு எதிராக 231 ரன்கள் குவித்தது. அதேபோன்று 2024 குஜராத் அணி சி.எஸ்.கே அணி எதிராக 231 ரன்களை குவித்தது.
இதுவே சி.எஸ்.கே அணிக்கு எதிராக ஒரு அணி அடித்த அதிகபட்ச ரன்களாக இருந்த வேளையில் நேற்றைய போட்டியில் ஆர்.சி.பி அணியானது 250 ரன்களை அடித்ததன் மூலம் சி.எஸ்.கே அணிக்கு எதிராக 250 ரன்களை குவித்த முதல் அணி என்ற சாதனையை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
