Dailyhunt

சி.எஸ்.கே அணியை இப்படி வீழ்த்தியதில் நிம்மதியா இருக்கு.. வெற்றிக்கு பிறகு - ரஜத் பட்டிதார் மகிழ்ச்சி

Crictamil 5 days ago

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையேயான நடப்பு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 11-ஆவது போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெங்களூரு அணியானது 43 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

சி.எஸ்.கே அணியை வீழ்த்தியது குறித்து : ரஜத் பட்டிதார் மகிழ்ச்சி

அதே வேளையில் சென்னை அணி தங்களது மூன்றாவது தோல்வியை இந்த தொடரில் பதிவு செய்துள்ளது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆர்.சி.பி அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெடுகளை இழந்து 250 ரன்களை குவித்து அசத்தியது.

பின்னர் 251 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சி.எஸ்.கே அணி 207 ரன்களுக்கு சுருண்டதால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 43 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆர்.சி.பி அணியின் இந்த ஆட்டம் பலரது மத்தியிலும் பாராட்டுகளையும் பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் கூறியதாவது :

உண்மையிலேயே இந்த வெற்றி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அதேபோன்று நாங்கள் ஒரு நல்ல கிரிக்கெட்டை விளையாடி இருக்கிறோம் என்ற நிம்மதியும் இருக்கிறது. இந்த போட்டியின் ஆரம்பத்தில் பந்து சற்று நின்று வந்தாலும் அதன்பிறகு பேட்டுக்கு வந்தது. டிம் டேவிட் சிக்ஸர்களை அடிக்கும் போது வெளியில் இருந்து பார்த்தாலும் சரி, உள்ளே இருந்து பார்த்தாலும் சரி மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

நானும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணியிருந்தா நிச்சயம் அடிச்சிருக்கலாம்.. தோல்விக்கு பிறகு - சி.எஸ்.கே கேப்டன் வருத்தம்

அந்த வகையில் இன்றைய போட்டியில் அவர் விளையாடிய விதத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். அதேபோன்று எங்களது அணியின் பந்துவீச்சாளர்களும் மிகச்சிறப்பாக பந்து வீசினர். இப்படி அனைவருமே இந்த வெற்றியில் பங்காற்றியது மிகவும் மகிழ்ச்சி என ரஜத் பட்டிதார் கூறியது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Crictamil