Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

விராட் கோலிக்கு எதிராக காகிஸோ ரபாடா நிகழ்த்திய அசத்தல் சாதனை - விவரம் இதோ

Crictamil 3 weeks ago

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 42-வது லீக் ஆட்டத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குஜராத் டைட்டன்ஸ் அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்.சி.பி அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது ஐந்தாவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் ஐந்தாம் இடத்திற்கு முன்னேறியது.

விராட் கோலியை வீழ்த்தி சாதனை நிகழ்த்திய ரபாடா :

அதேவேளையில் ஆர்.சி.பி அணி தங்களது மூன்றாவது தோல்வியை பதிவு செய்து தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. இந்த நிலையில் நேற்றைய போட்டியின் போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சார்பாக விளையாடிய நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான விராட் கோலி 13 பந்துகளை சந்தித்து 5 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 28 ரன்கள் குவித்து ரபாடா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.

ஏற்கனவே ஐ.பி.எல் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியிருக்கும் விராட் கோலி இந்த போட்டியிலும் இரண்டு ரன்களை தொட்ட போது இந்திய மண்ணில் 8000 ரன்களை ஐ.பி.எல் போட்டிகளில் அடித்த முதல் வீரராகவும் சாதனை நிகழ்த்தினார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்திய காகிஸோ ரபாடா விராட் கோலிக்கு எதிராக ஒரு மாபெரும் வரலாற்று சாதனையை தன் வசப்படுத்தியுள்ளார்.

அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : டி20 போட்டிகளை பொருத்தவரை விராட் கோலியை அதிக முறை ஆட்டமிழக்க வைத்த வீரராக சந்தீப் சர்மா ஏழு முறை அவரை வீழ்த்தி முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்து நெஹ்ரா 6 முறை, முகமது ஷமி மற்றும் பும்ரா ஆகியோர் தலா ஐந்து முறையும் விராட் கோலியா வீழ்த்தி இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் இருக்கின்றனர்.

கிரிஸ் கெயில், ஷேன் வாட்சன் ஆகியோரை தொடர்ந்து 3 ஆவது ஆர்.சி.பி வீரராக விராட் கோலி - நிகழ்த்திய சாதனை

இந்நிலையில் நேற்று விராட் கோலியின் விக்கெட்டை எடுத்த ரபாடா அவரை ஐந்தாவது முறையாக வீழ்த்தி பும்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோருடன் இணைந்துள்ளார். அதுமட்டுமின்றி வெளிநாட்டு பந்துவீச்சாளராக விராட் கோலியை டி20 போட்டிகளில் அதிக முறை விக்கெட் வீழ்த்திய வீரராக ஐந்து முறை வீழ்த்தி புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Crictamil