Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

யஷஸ்வி ஜெய்ஸ்வாலை புறக்கணிப்பது அநீதியானது: தேர்வுக்குழு மீது ரவிச்சந்திரன் அஸ்வின் அதிருப்தி

Crictamil 5 days ago

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்படாதது குறித்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் கடைசி இரண்டு ஆட்டங்களில் சுப்மன் கில் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் ஆடாத நிலையில், ஜெய்ஸ்வாலுக்கு இடம் கிடைக்காதது துரதிர்ஷ்டவசமானது என அவர் கூறியுள்ளார். தனது முந்தைய ஒருநாள் போட்டியில் சென்னையில் ஆட்டமிழக்காமல் 110 ரன்கள் குவித்த ஜெய்ஸ்வாலை அணியில் சேர்க்காதது அவரது தன்னம்பிக்கையை முழுமையாக சீர்குலைத்துவிடும் என்றும், ‘ரன் மெஷினான’ அவருக்கு மீண்டும் போதிய வாய்ப்புகளை வழங்கி ஃபார்முக்கு கொண்டு வருவது தேர்வுக்குழுவின் கடமை என்றும் அஸ்வின் சுட்டிக்காட்டியுள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Crictamil