சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஏழாவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பஞ்சாப் கிங்ஸ் அணியானது சென்னை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. அதேவேளையில் பஞ்சாப் அணியிடம் தோல்வியை சந்தித்த சி.எஸ்.கே அணி இந்த தொடரில் தங்களது தொடர்ச்சியான இரண்டாவது தோல்வியை சந்தித்தது.
யுஸ்வேந்திர சாஹலுக்கு 4 ஆவது ஓவரை வழங்காதது ஏன்? : ஷ்ரேயாஸ் ஐயர்
அதன்படி நேற்றைய இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்களை குவித்தது. பின்னர் 210 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணியானது 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 210 குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது பஞ்சாப் அணி சார்பாக விளையாடிய நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் 3 ஓவர்கள் பந்துவீசி 21 ரன்கள் விட்டு கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். பஞ்சாப் அணியின் அனுபவ மற்றும் முதன்மை சுழற்பந்து வீச்சாளரான அவர் ஏன் 3 ஓவர்கள் மட்டுமே வீசினார்? என்பது குறித்த கேள்வி பலரது மத்தியிலும் எழுந்தது. அது குறித்த தெளிவான விளக்கத்தை போட்டி முடிந்த பின்னர் ஷ்ரேயாஸ் ஐயர் வெளிப்படுத்திருந்தார்.
அந்த வகையில் ஷ்ரேயாஸ் ஐயர் கூறியதாவது : இந்த போட்டியில் சாஹலை 3 ஓவருடன் நான் நிறுத்திவிட்டேன். அவருக்கு கடைசி ஓவரை வழங்குவதற்கு முக்கியமான காரணமே ஷிவம் துபே ஸ்பின்னர்களுக்கு எதிராக எவ்வாறு விளையாடுவார்? என்பது நமக்கே தெரியும். அதுமட்டும் இன்றி ஒரு சில டொமஸ்டிக் வீரர்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மிகச்சிறப்பாக விளையாடுகின்றனர். எனவே தான் நான் இறுதி கட்டத்தில் சுழற்பந்து வீச்சாளரை பயன்படுத்துவதை விட மித வேகப்பந்து வீச்சாளரை பயன்படுத்தலாம் என அந்த ஒரு ஓவரை ஸ்டாய்னிஸ்-யிடம் வழங்கினேன்.
ஒட்டுமொத்த பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர்களுக்கும் அபராதத்தை பெற்றுத்தந்த ஷ்ரேயாஸ் ஐயர் - என்ன காரணம்?
யுஸ்வேந்திர சாஹல் பல ஆண்டுகளாக மிகச் சிறப்பான பந்துவீச்சாளராக இருந்து வருகிறார். உண்மையை சொல்லப்போனால் ஐபிஎல் போட்டிகளில் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் என்றும் அவரை சொல்லலாம். எப்போது இக்கட்டான நிலை ஏற்பட்டாலும் நான் அவரிடம் பந்தை தருவேன். இந்த போட்டியில் அவருக்கு கடைசி ஓவரை வழங்காததற்கு தனிப்பட்ட முறையில் வேறு எந்த காரணமும் கிடையாது என ஷ்ரேயாஸ் ஐயர் கூறியது குறிப்பிடத்தக்கது.
