Dailyhunt
அடிச்சு நொறுக்கினா அதை என்ஜாய் பண்ணனும்பா.. சிஎஸ்கேவுக்கு அந்த ட்ரீட்மென்ட்தான் கொடுத்தேன் - டிம் டேவிட் பேச்சு

அடிச்சு நொறுக்கினா அதை என்ஜாய் பண்ணனும்பா.. சிஎஸ்கேவுக்கு அந்த ட்ரீட்மென்ட்தான் கொடுத்தேன் - டிம் டேவிட் பேச்சு

CricUlagam 1 week ago

நேற்று சிஎஸ்கே அணிக்கு எதிராக வெறும் 25 பந்தில் 3 பவுண்டரி 8 சிக்ஸர் உடன் டிம் டேவிட் 70 ரன்கள் குவித்தார்.

மேலும் இவரை ஆட்டநாயகன் விருதும் பெற்றார்.

இந்த போட்டியில் ஜேமி ஓவர்டன் வீசிய 19ஆவது ஓவரில் நான்கு சிக்ஸர்கள் உடன் மொத்தம் 30 ரன்கள் குவித்து போட்டியை ஒட்டுமொத்தமாக சிஎஸ்கே கையில் இருந்து பறித்து விட்டார். மேலும் அதில் ஒரு சிக்சர் 16 மீட்டருக்கு மைதானத்தை தாண்டி போய் வெளியில் விழுந்தது.

இதுகுறித்து டிம் டேவிட் பேசும்போது “இந்த வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. நாம் ஆபத்தான கிரிக்கெட் விளையாடும் போது நமக்கு நல்ல நாள் கெட்ட நாள் இரண்டும் வரும். ஆனால் நல்ல நாள் வரும் பொழுது அதை நல்ல முறையில் என்ஜாய் செய்ய வேண்டும். சில நாட்கள் நான் அதிக நேரம் நின்று விளையாட வேண்டியதும் இருக்கும். ஆனால் நான் பயிற்சி செய்யும் விதத்தில் அது எனக்கு சுலபமானது”

“மேலும் நாங்கள் வலைப்பயிற்சியில் ஈடுபடும் பொழுது மைதானத்திற்கு வெளியே சிக்ஸர்கள் அடிக்க போட்டி போட்டுக் கொள்வோம். தினேஷ் கார்த்திக் போன்ற ஒருவருடன் இணைந்து வேலை செய்வது மிகவும் சிறப்பானது. அவருக்கு இங்குள்ள கண்டிஷன் துல்லியமாக தெரியும்” என்று கூறி இருக்கிறார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: CricUlagam