Dailyhunt
கேப்டனா வந்தேன்.. ஆனா தப்பான நேரத்துல அதை பண்ணிட்டேன்.. என்னால மும்பை தோத்துடிச்சு - சூரியகுமார் யாதவ் பேச்சு

கேப்டனா வந்தேன்.. ஆனா தப்பான நேரத்துல அதை பண்ணிட்டேன்.. என்னால மும்பை தோத்துடிச்சு - சூரியகுமார் யாதவ் பேச்சு

CricUlagam 2 weeks ago

ன்று ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல் அணியிடம் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் கேப்டன் பொறுப்பை ஏற்ற சூரியகுமார் யாதவ் இதற்கான காரணம் குறித்து பேசி இருக்கிறார்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சூரியகுமார் யாதவ் 34 பந்தில் 53 ரன்கள் எடுத்தார். அந்த அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. அடுத்து டெல்லி அணிக்கு சமீர் ரிஸ்வி 51 பந்தில் 90 ரன்கள் குவிக்க அந்த அணி எளிதாக வெற்றி பெற்றது.

இது குறித்து சூரியகுமார் யாதவ் பேசும் பொழுது “இந்த டெல்லி ஆடுகளம் கொஞ்சம் மெதுவாக இருக்கும் என்று நாங்கள் தவறாக கணித்து விட்டோம். ஆனால் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு நன்றாகவே இருந்திருக்கிறது. அவர்களுடைய பந்துவீச்சாளர்கள் திட்டங்களை மிகச் சிறப்பாக செயல்படுத்தினார்கள். எங்களால் திருப்பி அதைச் செய்ய முடியவில்லை”

“நாங்கள் 15 முதல் 20 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். நான் 16-வது ஓவரில் அவுட் ஆனேன். நான் தவறான நேரத்தில் ஆட்டம் இழந்தேன். இல்லையென்றால் எங்களுக்கு தேவையான ரன்னை நான் எடுத்துக் கொடுத்து இருப்பேன். மேலும் சமீர் ரிஸ்வி விளையாடிய விதத்திற்கு முழு பாராட்டு கொடுக்கப்பட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: CricUlagam