Dailyhunt

குர்னல் பாண்டியா ஏமாத்தி விக்கெட் எடுக்கிறான்.. முதல்ல அவன் ஸ்பின்னரே கிடையாது - அஸ்வின் அதிரடி கருத்து

CricUlagam 1 week ago

ர்சிபி அணியின் இடதுகை சுழல் பந்து வீச்சு ஆல்ரவுண்டர் குர்னல் பாண்டியா பந்து வீசும் முறை பலரது கவனத்தையும் கவர்ந்திருக்கிறது.

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் சுவாரசியமான முறையில் பேசி இருக்கிறார்.

குர்னல் பாண்டியா தனது பந்துவீச்சில் இரண்டு புதிய முறைகளை கொண்டு வந்திருக்கிறார். பேட்ஸ்மேன்கள் பந்தை தூக்கி அடிப்பதற்கு கடினமாக இருக்கும் வகையில் மிகவும் தாழ்வாக குனிந்து பந்து வீசுகிறார்.

இதைவிட முக்கியமாக சுழல் பந்துவீச்சாளராக இருந்து கொண்டு மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் பவுன்சர் வீசுகிறார். இந்த பந்துதான் அவர் குறித்து கவனத்தை அதிகரித்திருக்கிறது.

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்போது “குர்னல் பாண்டியா இடதுகை ஸ்பின்னர் என்று சொல்லிட்டு எட்டு பவுன்சர்கள் வீசி இருக்கான். ஏமாற்றி இரண்டு விக்கெட் எடுத்துட்டு போயிட்டான். இனிமே அவனை இடதுகை ஸ்பின்னர் என்று சொல்லக்கூடாது. இடதுகை பவுலர் என்று தான் சொல்ல வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: CricUlagam