இன்று ஆர்சிபி அணி தங்களுடைய சொந்த மைதானத்தில் சிஎஸ்கே அணிக்கு எதிராக விளையாடுகிறது. இந்த போட்டியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது?
என்று அஸ்வின் கூறியிருக்கிறார்.
ஆர்சிபி அணி முதல் போட்டியில் வெற்றி பெற்று இருக்கும் நிலையில் சிஎஸ்கே தனது முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. தற்போது சிஎஸ்கே அணியை விட ஆர்சிபி அணி வலிமையாக காணப்படுகிறது.
இது குறித்து அஸ்வின் பேசும்பொழுது “நான் ஆர்சிபி அணியை ஒருபோதும் அதிக வெற்றி வாய்ப்பு கொண்டவர்கள் என்று சொல்லவே மாட்டேன். என்னுடைய இதயம் சிஎஸ்கே அணிக்காக கொஞ்சம் அதிகம் துடிக்கும். இதற்காக நான் அவமானப்படப்போவதில்லை. என்னுடைய இதயம் சிஎஸ்கே வெல்லும் என்று சொல்ல, மூளையோ ஆர்சிபி வெல்லும் என்று சொல்கிறது”
“சிஎஸ்கே அணி முதல் போட்டியில் தோல்வி அடைந்ததும் இரண்டு மாற்றங்களை செய்கிறது. இப்போது இரண்டாவது போட்டியில் தோல்வி அடைந்திருக்கும் பொழுது எத்தனை மாற்றங்களை செய்வீர்கள்? முதல் போட்டிக்கு கொண்டு வந்த காம்பினேஷன் மேகமூட்டமான சூழ்நிலையில் சரியானது இல்லை. அது ஒரு விதிமீறல்” என்று கூறியிருக்கிறார்.

