தற்போது வெள்ளை பந்து கிரிக்கெட்டில் பேட்டிங்கில் தடுமாறி வரும் ரிஷப் பண்ட் சூரிய வன்சியை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என மைக்கேல் வாகன் தெரிவித்திருக்கிறார்.
இப்போது இந்திய வெள்ளை பந்து அணிகளில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஆக இடம் பெற முடியாத சூழ்நிலை இருக்கிறது. இவரை விட சிறந்த முறையில் விளையாடும் வீரர்கள் இருக்கிறார்கள்.
இது குறித்து மைக்கேல் வாகன் பேசும்போது ” ரிஷப் பண்ட் வேறு எந்த நாட்டில் இருந்திருந்தாலும் விளையாடும் அணியில் இருப்பார். இந்தியாவில் நிறைய கிரிக்கெட் தலைமைகள் இருப்பதால் இடம் கிடைப்பதில்லை. நல்ல பேட்டிங் செய்யும் விக்கெட் கீப்பர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்”
“ரிஷப் பண்ட் சூரியவன்சியைப் போல விளையாட முயற்சி செய்ய வேண்டும். நானாக இருந்தால் அதைத்தான் செய்வேன், பந்தை மைதானத்திற்கு வெளியே அடிக்க வேண்டும். என்னால் 48 பந்தில் சதம் அடிக்க முடியும் என நம்ப வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

