Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சமூக வலைதள விமர்சனத்தை நான் இப்படித்தான் பார்க்கிறேன்.. சஞ்சு சாம்சன் நச் பதில்

சமூக வலைதள விமர்சனத்தை நான் இப்படித்தான் பார்க்கிறேன்.. சஞ்சு சாம்சன் நச் பதில்

CricUlagam 4 hrs ago

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 226 ரன்கள் இலக்கைத் துரத்தி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி 33 பந்துகளில் 67 ரன்கள் குவித்தார். 8 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு வலுவான அடித்தளம் அமைத்தார். இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரிலும் முன்னிலை பெற்றது.

சமீபகாலமாக சஞ்சு சாம்சனின் ஆட்டம் மற்றும் அணியில் அவருக்கான இடம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்தன. குறிப்பாக, இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அணியில் இருக்கும் நிலையில் சஞ்சுவின் இடம் குறித்த விவாதங்களும் அதிகரித்தன. இத்தகைய சூழலில் நியூசிலாந்துக்கு எதிராக அவர் அடித்த அரைசதம் கவனம் பெற்றுள்ளது.

இதுகுறித்து பேசிய சஞ்சு சாம்சன், சமூக வலைதளங்களில் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாமல் தனது பயிற்சி மற்றும் ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், யாரையும் தவறு என்று நிரூபிப்பதற்காக தான் கிரிக்கெட் விளையாடவில்லை என்றும், தனது ஆட்டத்தை முன்னிலைப்படுத்தி அணிக்காக சிறப்பாகச் செயல்படுவதே நோக்கம் என்றும் கூறினார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: CricUlagam