நேற்று நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜீன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி லக்னோ அணியை தோற்கடித்தது.
இதன் மூலமாக தங்களது முதல் வெற்றியை பெற்றிருக்கும் டெல்லி அணி தரவரிசை பட்டியலில் தங்களது வெற்றி கணக்கை துவங்கி இருக்கிறது. அதே வேளையில் லக்னோ அணிக்கு இது முதல் தோல்வியாக அமைந்திருக்கும் நிலையில் கேப்டன் ரிஷப் பண்ட் இந்த போட்டியில் துவக்க வீரராக களம் இறங்கியது சற்று விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியில் தொடக்க ஆட்டத்தில் கலக்கிய மார்க்ரம் மற்றும் ஷான் மார்ஸ் ஜோடி பல போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. இவர்களது அதிரடியான தொடக்கமே லக்னோவிற்கு வெற்றி வாய்ப்பு எளிதாக்கி கொடுத்தது. இந்த சூழ்நிலையில் அதனை மாற்றியமைக்கும் விதமாக ரிஷப் பண்ட் இந்த போட்டியில் துவக்க ஆட்டக்காரராக களம் இறங்கினார்.
ஆனால் 9 பந்துகளை எதிர்கொண்ட அவர் 7 ரன்னில் எதிர்பாராதவிதமாக ஆட்டம் இழந்தார். இந்த சூழ்நிலையில் தான் களம் இறங்கியதற்கான காரணம் குறித்து அவரே கூறும் போது ” இந்த போட்டியில் தான் தொடக்க வீரராக களம் இறங்கியதற்கான முக்கிய காரணம் எதிரணியின் கேப்டன் அக்ஷார் பட்டேல்தான். அவர் பவர் பிளேவிற்குள் பந்து வீச வருவார் என்று நினைத்து தான் இடது கை பேட்ஸ்மேன் ஆக அவரை அடித்து ஆட வேண்டும் என்று களம் இறங்கினேன். ஆனால் அவர் வந்து வீச வருவதற்கு முன்பாகவே நான் ஆட்டம் இழந்து விட்டேன்” என்று பேசி இருக்கிறார்.

