Dailyhunt
தோத்தது போதும் இனி பேட்டிங் வரிசையை நான் செட் பண்றேன்.. பஞ்சாப் கிங்ஸ் போட்டிக்கு வலிமையான பேட்டிங் வரிசையை செட் செய்த தோனி.. முழு விபரம்

தோத்தது போதும் இனி பேட்டிங் வரிசையை நான் செட் பண்றேன்.. பஞ்சாப் கிங்ஸ் போட்டிக்கு வலிமையான பேட்டிங் வரிசையை செட் செய்த தோனி.. முழு விபரம்

CricUlagam 1 week ago

19வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழாவில் நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாட இருக்கின்றன.

இந்த சூழ்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான முதலாவது போட்டியில் சென்னை அணி 127 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்தது. இந்த சூழ்நிலையில் சென்னை அணியின் ஆஸ்தான வீரரான மகேந்திர சிங் தோனி, பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாட உள்ள சிஎஸ்கே வின் பேட்டிங் வரிசையை மாற்றி அமைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதன்படி கடந்த சீசனில் துவக்க இடத்தில் இறங்கிய ஆயுஷ் மாத்ரே, ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மூன்றாவது இடத்தில் விளையாடி முதல் பந்திலையே அவுட் ஆகி வெளியேறினார். இதனால் மீண்டும் அவர் தொடக்க இடத்தில் விளையாடும் படி வலியுறுத்தப்பட்டிருக்கிறார். அதேபோல கடந்த சீசனில் 7வது இடத்தில் இறங்கி விளையாடிய சிவம் தூபே இந்த முறை ஐந்தாவது இடத்தில் விளையாடும் படி அறிவுறுத்தப்பட்டிருக்கிறார். அதாவது முதலில் சற்று நிதானமாகவும் பின்னர் அதிரடியாக விளையாட வேண்டும் என்பதே இவரது பணி.

மேலும் காயம் காரணமாக முதலாவது போட்டியில் விளையாடாத டெவால்ட் பிரவிஸ், முழுமையாக குணமடைந்து விட்டதால் அவர் நான்காவது இடத்தில் பேட்டிங் செய்வார் என்று தெரிகிறது. எனவே அதற்கடுத்த இடங்களில் சர்பராஸ் கான் மற்றும் கார்த்திக் சர்மா விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். இதில் சஞ்சு துவக்க வீரராகவே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றியுடன் தனது கணக்கை துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: CricUlagam