Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மஹாராஷ்டிரா அரசு மருத்துவமனையில் தீ விபத்து - 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு

மஹாராஷ்டிரா அரசு மருத்துவமனையில் தீ விபத்து - 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு

Daily Tamilnadu 5 years ago

மஹாராஷ்டிராவில் அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் 7 குழந்தைகள் தீ விபத்திலிருந்து காப்பாற்றப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மருத்துவமனையில் தீ விபத்து

மராட்டிய மாநிலம் பண்டாரா அரசு மருத்துவமனையில் இன்று அதிகாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் உடல் கருகி பலியான சம்பவம் நடந்துள்ளது. பண்டாரா மாவட்ட மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 10 குழந்தைகள் பலியானதை தொடர்ந்து, தீ விபத்தில் சிக்கிய 7 குழந்தைகள் காப்பாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் அங்கிருந்த செவிலியர் ஒருவர் ஐசியு பிரிவிலிருந்து புகை வருவதை கண்டுபிடித்து அங்குள்ள மருத்துவர்களிடம் கூறியுள்ளார். அதை தொடர்ந்து மற்ற குழந்தைகளையும் காப்பாற்ற முடிந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து அம்மருத்துவமனையில் பணியாற்றும் அறுவை சிகிச்சை மருத்துவர் பிரமோத் கன்டேட், 'அதிகாலையில் நடைபெற்ற இச்சம்பவத்தில் 7 குழந்தைகளை காப்பாற்றியுள்ளோம். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது' என்று கூறியுள்ளார்.

மேலும் இச்சம்பவத்தை குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் பதிவை பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Daily Tamilnadu