Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Dailyhunt 1 week ago
சக்தி மசாலா சார்பில் ஹோம் ப்ரணர் (Homepreneur) சுய சக்தி விருதுகள்! - அமைச்சர்கள் பங்கேற்பு

பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 9 ஆண்டுகளாக சக்தி மசாலா சார்பில் ஹோம் ப்ரணர் (Homepreneur) சுய சக்தி விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகின்றனர்.

சென்னை சேத்துப்பட்டு உள்ள ஆண்டாள் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற இந்த விழாவில் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், நிதியமைச்சர் மரிய வில்சன் சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி மற்றும் நடிகர் சூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கல்வி, இலக்கியம், சமூக சேவை, உணவு, கலை மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.


(கவிமகிழினி - இலக்கியம் மற்றும் கல்விப்பிரிவு)

அமைச்சர் ராஜ்மோகன் பேசும் போது, இந்த விருதால் விருதுக்குத்தான் பெருமை. உங்களால் முடியும் என்று நம்புங்கள் முடியும். சிறுகிராமத்தில், எளிய குடும்பத்தில் பிறந்த நான் இன்று அமைச்சரவையில் இடம்பெறுவேன் என்று நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. அந்த வாய்ப்பைக் கொடுத்தவர் எங்கள் தலைவர் ஜோசப் விஜய்.

யாரெல்லாம் இந்த மண்ணையும், மக்களையும் நேசிக்கிறார்களோ, ஊருக்கு உழைப்பவர்கள் அனைவருமே என் உறவினர்கள்தான். நிம்மதியில்லை, நேரமில்லை என்பதை அடுத்தவர்களிடம் தேடக்கூடாது. அது நம்மிடமே இருக்கிறது.

ஆக்கப்பூர்வமான விமர்சனங்களுக்கு செவிகொடுக்க வேண்டும். விமர்சனம் என்பது அவசியமானது, ஆரோக்கியமானது. அதை அனைவரும் ஏற்க வேண்டும் எனத்தெரிவித்தார்.
Dailyhunt
Disclaimer: This content has been published by the user directly on Dailyhunt, an intermediary platform. Dailyhunt has neither reviewed nor has knowledge of such content. Publisher: Dailyhunt