Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Dailyhunt 1 week ago
சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு இன்ஸ்பிரேசனல் பெண்மணி விருது!

பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 9 ஆண்டுகளாக சக்தி மசாலா சார்பில் ஹோம் ப்ரணர் (Homepreneur) சுய சக்தி விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகின்றனர்.

சென்னை சேத்துப்பட்டு உள்ள ஆண்டாள் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற இந்த விழாவில் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், நிதியமைச்சர் மரிய வில்சன் சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி மற்றும் நடிகர் சூரிய உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கல்வி, இலக்கியம், சமூக சேவை, உணவு, கலை மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.

தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு இன்ஸ்பிரேசனல் பெண்மணி விருதை ஆச்சி மசாலா நிறுவனர்கள் துரைசாமி, மற்றும் சாந்தி துரைசாமி ஆகியோர் வழங்கினர்.


சௌமியா அன்புமணி பேசும் போது, முன்பெல்லாம் என்னைப் பார்க்கும் பலர் அரசியலுக்கு எப்போது வருவீர்கள் என்று கேட்பார்கள். நான் எப்போதும் அரசயலில் தானே இருக்கிறேன் என்று சொல்வேன்.

பிறந்த விடும் சரி புகுந்த வீடும் சரி அரசியல் சம்பந்தப்பட்டதுதான். அன்புமணி அவர்கள் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது கிராமங்களில் பாம்பு கடித்து நிகழும் இறப்பு அதிகமாக இருப்பது குறித்து உரையாடுவோம். அந்த சமயம் மத்திய அரசு கொண்டு வந்தது தான் 108 ஆம்புலன்ஸ். அனைத்து ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளிலும் பாம்புக்கடிக்கான மருந்து இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

தர்மபுரியில் உள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று அனைவரிடமும் கை கொடுத்து பேசுவேன். அது எனக்கு மிகவும் பிடிக்கும். என்னுடைய இன்ஸ்பிரேஷன் மக்கள்தான். மக்களைப் பார்த்தவுடன் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். என்னை பார்த்தவுடன் அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் எனக் குறிப்பிட்டார்.

சௌமியா அன்புமணியின் பேச்சு ஆக்கப்பூர்வமாகவும், அழுத்தம் திருத்தமாகவும் பேசுவார். மிகச்சிறந்த ஆளுமையாக விளங்கி வருகிறார். ஒரு வெற்றிகரமாக பெண்ணுக்குப் பின்னாலும் ஒரு ஆண் இருக்கிறார் என்பதற்கு அன்புமணி ஓர் உதாரணம். நானும் உதாரணம். - துரைசாமி, ஆச்சி மாசலா நிறுவனர்

பெண்கள் முன்னேற்றத்திற்கு ஹெமச்சந்திரன் கடுமையாக உழைத்து வருகிறார். சவுமியாவைப் பார்த்த போது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. நல்ல கனிவான ஆளுமைத்திறன் கொண்ட பெண் அவர். அவர் பல வெற்றிகளைக் குவிக்க வேண்டும். - சாந்தி துரைசாமி ஆச்சி மசாலா நிறுவனர்.
Dailyhunt
Disclaimer: This content has been published by the user directly on Dailyhunt, an intermediary platform. Dailyhunt has neither reviewed nor has knowledge of such content. Publisher: Dailyhunt