Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

ஐபிஎல் 2026: இதுவரை. புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

இருபத்தியோராவது ஆட்டம் ஹைதராபாத் vs ராஜஸ்தான் - ஹைதராபாத் - ஏப்ரல் 13

முதலில் ஆடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கட்டுகள் இழப்பிற்கு 216 ரன் எடுத்தது. அந்த அணியின் அணித்தலைவர் இஷான் கிஷன் 91 ரன் (44 பந்துகள், 8 ஃபோர், 6 சிக்சர்) எடுத்தார். ஹென்றி கிளாசன் (26 பந்துகளில் 40 ரன்), நிதீஷ் குமார் ரெட்டி (13 பந்துகளில் 28 ரன்), சலீல் அரோரா (13 பந்துகளில் 24 ரன்), ட்ராவிஸ் ஹெட் (18 பந்துகளில் 18 ரன்) ஆகியோரும் சிறப்பாக ஆடினர். இரண்டாவதாக ஆட வந்த ராஜஸ்தான் அணியின் தொடக்கம் மிக மிக மோசமாக இருந்தது. யசஸ்வீ ஜெய்ஸ்வால் (1 ரன்), வைபவ் சூர்ய வன்ஷி (பூஜ்யம்), துருவ் ஜுரல் (பூஜ்யம்), பிரிட்டோரியஸ் (பூஜ்யம் ரன்), ரியன் பராக் (4 ரன்) ஆகிய ஐவரும் பெரிதாக எதுவும் செய்யாமல் ஆட்டமிழந்தார்கள். மூன்று ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 9 ரன்னுக்கு 5 விக்கட்டுகள் இழந்திருந்தது. அதன் பின்னர் ரவீந்தர் ஜதேஜா (32 பந்துகளில் 45 ரன்), டொனாவன் ஃபெரேரா (44 பந்துகளில் 69 ரன்), துஷார் தேஷ்பாண்டே (11 பந்துகளில் 25 ரன்) அடித்ததால் ராஜஸ்தான் அணி 19 ஓவர்களில் 159 ரன் எடுத்து ஆட்டமிழந்தது. இதனால் ஹைதராபாத் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் ஓவரில் மூன்று விக்கட்டுகள் எடுத்த ப்ரஃபுல் ஹிங்கே ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

ALSO READ:வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

இருபத்தியிரண்டாவது ஆட்டம் சென்னை vs கொல்கொத்தா - சென்னை - ஏப்ரல் 14

இந்த ஆட்டத்தில் சென்னை அணிக்கு இரண்டாவது வெற்றி கிடைத்தது. முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 192 ரன் எடுத்தது. சஞ்சு சாம்சன் 48 (32 பந்துகள் 4 ஃபோர், 3 சிக்சர்) ரன்னும் ஆயுஷ் மாத்ரே 38 (17 பந்துகள், 6 ஃபோர், 2 சிக்சர்) ரன்னும் டிவால்ட் ப்ருவிஸ் 41 (29 பந்துகள், 4 ஃபோர், 2 சிக்சர்) ரன்னும் எடுத்தனர். இரண்டாவதாக ஆடிய கொல்கொத்தா அணி தனது பேட்டிங் லைனப்பில் மாற்றம் செய்தது. தொடக்க வீரர்களாக ஃபின் ஆலனும் சுனில் நரேனும் இறங்கினர். ஆனால் ஃபின் ஆலன் (1 ரன்) விரைவில் ஆட்டமிழந்தார். அதனால் ஏறத்தாழ தொடக்க வீரராக அஜிங்க்யா ரஹானே இறங்க வேண்டியதாயிற்று. ஆனால் கொல்கொத்தா வீரர்களால் அதிரடியாக ஆடமுடியவில்லை. அந்த அணியின் சுனில் நரேன் (24 ரன்), அஜிங்க்யா ரஹானே (28 ரன்), ரகுவன்ஷி (27 ரன்), ரொவ்மென் போவெல் ஆட்டமிழக்காமல் (31 ரன்), ரமன்தீப் சிங் (35 ரன்) ஆகியோர் மட்டும் சுமாராக ஆடினர். இதனால் கொல்கொத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கட் இழப்பிற்கு 160 ரன் மட்டுமே எடுத்தது. இதனால் 32 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியிடம் தோல்வி அடைந்தது. சென்னை அணியின் நூர் அகமது 3 விக்கட்டுகள் எடுத்தார். அவர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

ALSO READ:பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

இருபத்திமூன்றாவது ஆட்டம் லக்னோ vs பெங்களூரு - பெங்களூரு - ஏப்ரல் 15

முதலில் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தொடக்கம் முதலே சரியாக விளையாடவில்லை. அந்த அணியின் மிட்சல் மார்ஷ் (32 பந்துகளில் 40 ரன்), ஆயுஷ் பதோனி (24 பந்துகளில் 38 ரன்), முகுல் சௌத்ரி (28 பந்துகளில் 39 ரன்) ஆகிய மூவர் மட்டுமே சற்று நிலைத்து ஆடினர். பிற வீரர்கள் வந்தார்கள் போனார்கள் ரகம். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 146 ரன் மட்டுமே எடுத்தது. பெங்களூரு அணியின் ரசிக் சலாம் 4 விக்கட்டுகளும் புவனேஷ் குமார் 3 விக்கட்டுகளையும் க்ருணால் பாண்ட்யா 2 விக்கட்டுகளையும் எடுத்தனர். இரண்டாவதாக ஆடிய பெங்களூரு அணி இந்த ஸ்கோரை 15.1 ஓவர்களில் 5 விக்கட் இழப்பிற்கு 149 ரன் எடுத்து விரைவில் அடைந்தது. அந்த அணியின் விராட் கோலி (49 ரன்), ரஜத் படிதார் (27 ரன்), ஜித்தேஷ் ஷர்மா (23 ரன்) சிறப்பாக ஆடினர். ஜேசன் ஹேசல்வுட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இருபத்திநான்காவது ஆட்டம் மும்பை vs பஞ்சாப் - மும்பை வான்கடே மைதானம் - ஏப்ரல் 16

முதலில் ஆடிய மும்பை அணியின் இன்று ரோஹித் ஷர்மா தொடக்க ஆட்டக்காரராக ஆடவில்லை. அவருக்குப் பதிலாக க்விண்டன் டி காக் ஆடினார். இது அவரது இந்த சீசனின் முதல் ஆட்டம். முதல் ஆட்டத்திலேயே ஆட்டமிழக்காமல் அவர் சதம் அடித்தார். 60 பந்துகளில் 112 ரன், 8 ஃபோர், 7 சிக்சர். நமன் தீர் 50 ரன் அடித்தார். மற்றவர்கள் சோபிக்கவில்லை. இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கட் இழப்பிற்கு 195 ரன் எடுத்தது. பஞ்சாப் அணியில் அர்ஷதீப் சிங் 3 விக்கட்டுகள் எடுத்தார். இரண்டாவதாக விளையாடிய பஞ்சாப் அணியில் பிரப்சிம்ரன் சிங் 80 ரன்னும் ஷ்ரேயாஸ் ஐயர் 66 ரன்னும் எடுத்தனர். இதனால் பஞ்சாப் அணி 16.3 ஓவர்களில் 3 விக்கட் இழப்பிற்கு 198 ரன் எடுத்து வெற்றிபெற்றது. அர்ஷ்தீப் சிங் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

ALSO READ:வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம். டெல்லி 5ஆம் இடம். குஜராத் 6ஆம் இடம். லக்னோ 7ஆம் இடம். சென்னை 8ஆம் இடம். மும்பை 9ஆம் இடம். கொகொத்தா 10ஆம் இடம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari