Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அயோத்திக்கு விமானத்தில் அழைத்துச் செல்வதாக மோசடி; மதுரையில் பரபரப்பு!

அயோத்திக்கு விமானத்தில் அழைத்துச் செல்வதாக மோசடி; மதுரையில் பரபரப்பு!

  • .

மதுரையில் இருந்து ஆன்மீக சுற்றுலா மூலம் அயோத்தி செல்வதற்காக இண்டிகோ விமானம் மூலம் 100 பயணிகளை அழைத்துச் செல்வதற்காக கூறி சேலம் ஜே.பி.

டிராவல்ஸ் நிறுவனம் தலா 1 நபருக்கு விமான கட்டணம் தங்கும் வசதி உள்பட பணம் 29 ஆயிரம் வசூல் செய்து செய்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு இன்டிகோ விமானம் மூலம் மதுரையில் இருந்து டெல்லி சென்று அங்கிருந்து அயோத்தியா செல்வதற்காக 106 பயணிகள் விமான நிலையம் வந்தடைந்தனர்.

106 பயணிகள் அனைவரும் டெல்லி செல்ல இண்டிகோ விமான நிறுவனத்தில் கேட்டனர் . அப்படி எதுவும் புக் செய்யப்படவில்லை என, அதிகாரிகள் கூறியதையடுத்து, பயணிகள் அதிர்ச்சி அடைந்து கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சேலம் ஜே.பி. டிராவல்ஸ் மேலாளார்
ராஜா பயணிகளிடம் கலந்து பேசி, வரும் 18ம் தேதி 106 பயணிகளையும் அயோத்தி அழைத்துச் செல்வதாகக் கூறியதை அடுத்து, பயணிகள் சமாதானம் அடைந்தனர்.

ALSO READ:பள்ளியில் கிருஷ்ணர் ராதை வேடமிட்டு கோகுலாஷ்டமி கொண்டாட்டம்!

பின்னர் டிராவல்ஸ் நிறுவன ஏற்பாட்டின் படி, 106 பயணிகளும் சேலம் புறப்பட்டுச் சென்றனர்!

ரவிச்சந்திரன், மதுரை

See Full Bio

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari