Dailyhunt

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

astrology panchangam rasipalan dhinasari 3

இன்றைய பஞ்சாங்கம் - ஏப்ரல் 18

ஸ்ரீராமஜயம் - ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்

||श्री:|| !!ஸ்ரீ:!!

श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

சித்திரை ~ 05 (18.4.2026) சனிக்கிழமை
வருடம் ~ பராபவ {பராபவ நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ வஸந்த ருது.
மாதம் ~ சித்திரை மாதம் { மேஷ மாஸம்}
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ 3.46 pm வரை ப்ரதமை பின் த்விதீயை.
நாள் ~ {ஸ்திர வாஸரம்} சனிக்கிழமை.
நக்ஷத்திரம் ~ 10.55 am வரை அச்வினி பின் பரணி.
யோகம் ~ ப்ரீத்தி
கரணம்~ பவம்
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்
ராகு காலம் ~ காலை 9.00 ~ 10.30.
எமகண்டம் ~ மதியம் 1.30 ~ 3.00.
குளிகை ~ காலை 6.00 ~ 7.30.
நல்ல நேரம் ~ 7 to 8 am and 11 to 12 pm
சூரிய உதயம் ~ காலை 6.04
சந்திராஷ்டமம் ~ கன்னி
சூலம் ~ கிழக்கு.
பரிகாரம் ~ தயிர்
ஸ்ராத்த திதி ~ திதித்வயம் — பிரதமை / த்விதீயை.
இன்று ~

स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु !!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

ஓரை என்றால் என்ன?
ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.

சனிக்கிழமை ஹோரை
காலை
6-7 : சனி - அசுபம் ❌
7-8 : குரு - சுபம் ✔
8-9: செவ்வாய் - அசுபம் ❌
9-10: சூரியன் - அசுபம் ❌
10-11 : சுக்கிரன் - சுபம் ✔
11-12 : புதன் - சுபம் ✔

பிற்பகல்
12-1 : சந்திரன் - சுபம் ✔
1-2 : சனி - அசுபம் ❌
2-3 : குரு - சுபம் ✔

மாலை
3-4: செவ்வாய் - அசுபம் ❌
4-5 : சூரியன் - அசுபம் ❌
5-6 : சுக்கிரன் - சுபம் ✔
6-7 : புதன் - சுபம் ✔

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் - மிக மோசமான தசை, புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அருமருந்தாக அமையும்..


இன்றைய (18-04-2026) ராசி பலன்கள்


மேஷம்

உறவினர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். கனிவான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். விருப்பமான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய நபர்களிடம் குடும்ப விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். உணர்ச்சிவசப்படாமல் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படவும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

அஸ்வினி : அனுசரித்து செல்லவும்.
பரணி : விருப்பம் நிறைவேறும்.
கிருத்திகை : சூழ்நிலை அறிந்து செயல்படவும்.


ரிஷபம்

வியாபார பணிகளில் சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத சில இடமாற்றங்கள் ஏற்படும். விளையாட்டான பேச்சுகளை தவிர்க்கவும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். வித்தியாசமான கற்பனைகள் மூலம் மனதில் குழப்பம் உண்டாகும். நிதானமான செயல்பாடுகள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். இடமாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். தாமதம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

கிருத்திகை : சிந்தித்து செயல்படவும்.
ரோகிணி : ஆதரவான நாள்.
மிருகசீரிஷம் : முயற்சிகள் கைகூடும்.


மிதுனம்

நுணுக்கமான விஷயங்கள் மூலம் லாபங்கள் அதிகரிக்கும். வாகன மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மனதில் மேம்படும். செலவுகளின் தன்மைகளை அறிந்து மேற்கொள்வது சேமிப்பிற்கு நன்மை அளிக்கும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். ஆரோக்கியம் நிமித்தமான விஷயங்களில் கவனம் வேண்டும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்

மிருகசீரிஷம் : லாபங்கள் அதிகரிக்கும்.
திருவாதிரை : நன்மையான நாள்.
புனர்பூசம் : கவனம் வேண்டும்.


கடகம்

உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவான முடிவுகள் ஏற்படும். முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் நிதானத்துடன் செயல்படவும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் படிப்படியாக குறையும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம்

புனர்பூசம் : பொறுப்புகள் மேம்படும்.
பூசம் : தெளிவுகள் பிறக்கும்.
ஆயில்யம் : இன்னல்கள் குறையும்.


சிம்மம்

செய்யும் முயற்சிக்கு ஏற்ப பாராட்டுகள் கிடைக்கும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். நண்பர்களின் மறைமுகமான ஆதரவுகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் உயர்வான சூழ்நிலைகள் காணப்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். வியாபார பணிகளில் சிந்தித்து செயல்படவும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் : பாராட்டுகள் கிடைக்கும்.
பூரம் : ஆதரவுகள் கிடைக்கும்.
உத்திரம் : சிந்தித்து செயல்படவும்.


கன்னி

வியாபாரம் நிமித்தமான செயல்களில் கவனம் வேண்டும். அரசு பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் ஏற்படும். சிந்தனை போக்கில் குழப்பம் உண்டாகும். மற்றவர்கள் மீதான கருத்துக்களை தவிர்க்கவும். தோற்றப்பொலிவில் மாற்றங்கள் காணப்படும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

உத்திரம் : கவனம் வேண்டும்.
அஸ்தம் : குழப்பமான நாள்.
சித்திரை : மாற்றங்கள் காணப்படும்.


துலாம்

கடினமான பணிகளையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சஞ்சலமான சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் ஏற்படும். மற்றவர்களை நம்பி வாக்குறுதிகளை தர வேண்டாம். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். நற்செயல் விளையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்

சித்திரை : அறிமுகங்கள் கிடைக்கும்.
சுவாதி : குழப்பங்கள் ஏற்படும்.
விசாகம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.


விருச்சிகம்

உத்தியோக பணிகளில் முன்னேற்றமான சூழல் அமையும். வெளியூர் பயணங்களில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். கால்நடை தொடர்பான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கனிவான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்

விசாகம் : முன்னேற்றமான நாள்.
அனுஷம் : ஆர்வம் ஏற்படும்.
கேட்டை : புரிதல்கள் மேம்படும்.


தனுசு

பழக்க வழக்கங்களில் மாற்றங்கள் காணப்படும். பிள்ளைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமையும் அதிகரிக்கும். அறப்பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். புதிய பொருள்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். மனதளவில் புதிய கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். எதிலும் வேகத்தை விட விவேகத்துடன் செயல்படுவது நல்லது. அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மூலம் : மாற்றங்கள் காணப்படும்.
பூராடம் : ஈடுபாடுகள் உண்டாகும்.
உத்திராடம் : விவேகம் வேண்டும்.


மகரம்

ஆரோக்கியத்தில் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும். நிலம் சம்பந்தப்பட்ட வியாபாரத்தில் வருமானம் கிடைக்கும். தூர தேச பயணம் குறித்த சிந்தனைகள் மேம்படும். கூட்டாளிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். தெளிவு பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திராடம் : வருமானம் கிடைக்கும்.
திருவோணம் : அனுசரித்து செல்லவும்.
அவிட்டம் : மேன்மை உண்டாகும்.


கும்பம்

வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். சிறிய தூர பயணங்களால் மனதளவில் மாற்றம் உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். விளையாட்டு விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். உறவினர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பக்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு நிறம்

அவிட்டம் : ஒத்துழைப்பு மேம்படும்.
சதயம் : மாற்றம் உண்டாகும்.
பூரட்டாதி : வேறுபாடுகள் மறையும்.


மீனம்

புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். கலை சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். தடைப்பட்ட சில வரவுகள் கிடைக்கும். வஞ்சகமான பேச்சுக்களை தவிர்க்கவும். மற்றவர்களை வழிநடத்தி செல்லும் ஆற்றல் வெளிப்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். கனிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

பூரட்டாதி : முன்னேற்றம் ஏற்படும்.
உத்திரட்டாதி : வரவுகள் கிடைக்கும்.
ரேவதி : அனுசரித்து செல்லவும்.



தினம் ஒரு திருக்குறள்

thiruvalluvar

அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல் - குறள் எண்: 101

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

மு.வ உரை: தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.

தினம் ஒரு திருமுறை

மறை - 1. பதிகம் - 44 பாடல் - 10

நாணொடுகூடிய சாயினரேனு நகுவ ரவரிருபோதும்
ஊணொடுகூடிய வுட்குநகையா லுரைக ளவைகொளவேண்டா
ஆணொடுபெண்வடி வாயினர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
பூணெடுமார்பரோ பூங்கொடிவாடப் புனைசெய்வதோ விவர்பொற்பே.

விளக்கவுரை :நாணத்தொடு கூடிய செயல்களை இழந்து ஆடையின்றித் திரிதலால் எல்லோராலும் பரிகசிக்கத் தக்கவராகிய சமணரும், இருபொழுதும் உண்டு அஞ்சத்தக்க நகையோடு திரியும் புத்தரும், ஆகிய புறச்சமயத்தவர் உரைகளை மெய்யெனக் கொள்ளவேண்டா. அன்பர்கள் வழிபடும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் மாதொருபாகராய் அணிகலன்கள் பூண்ட திருமார்பினராய் விளங்கும் இறைவர் இப்பூங்கொடியாளை வாடச்செய்து பழிப்புரை கொள்ளல் இவரது அழகுக்கு ஏற்ற செயலா?

தினம் ஒரு பாசுரம்

நாலாயிர திவ்யப் பிரபந்தம்

' ஆலினிலைப் பாலகனாய் அன்று உலகமுண்டவனே!, வாலியைக் கொன்று அரசு இளையவானருத்துக்கு அளித்தவனே!, காலின்மணி கரையலைக்கும் கணபுரத்து என் கருமணியே!, ஆலிநகர்க்கு அதிபதியே! அயோத்திமனே! தாலேலோ'

  • ( குலசேகரப் பெருமாள் அருளிய பெருமாள் திருமொழி - சக்கரவர்த்தித் திருமகனைக் கௌசலையார் தாலாட்டும் பாசுரம் - 725).

இன்றைய சிந்தனை!

முதல் படி

உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு. உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன.

  • Goethe.

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

  • Martin Luther King Jr.

உழைப்பு = வெற்றி

மாபெரும் லட்சியத்தையும் வெற்றியில் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால், யாரும் உயர்ந்த நிலையை அடைய முடியும்! - அம்பேத்கர்

வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்

  1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
  2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
  3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.

தினசரி.காம்


இன்றைய சிந்தனைக்கு…

பொறுப்பு என்பது, பாரம் அல்ல, வாய்ப்பு, ஒருவரின், திறமையை நிரூபிப்பதற்கான, சந்தர்ப்பம்!
முடியாது என்பதை பிறகு சிந்தி, எப்படி முடிப்பது என்பதை, எப்பொழுதும் சிந்தி, வெற்றி நிச்சயம்!!
ஒருவருக்கு கிடைத்ததைப் பற்றி, பேசும் இந்த சமூகம், அதனை அடைய, அவர் இழந்ததைப் பற்றி, பேசுவதில்லை!!!

உன் வார்த்தைகளின் நாகரீகமே, பிறரிடம், உனக்கான நன்மதிப்பை, பெற்று கொடுக்கும்!
நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால், உன்னுடைய கால்களை பயன்படுத்து, பிறரின் முதுகை அல்ல!!
உன்னை எப்படி நினைக்கிறாயோ, மத்தவங்களையும் அப்படியே நினைக்க கத்துக்கோ; உன் எண்ணம் உறுதியா இருந்தா, நீ எண்ணியபடி உயர்ந்திடுவாய்!!!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari