இன்றைய பஞ்சாங்கம்: மே 24
ஶ்ரீராமஜெயம் ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம
||श्री:||
!!श्रीरामजयम!! ஸ்ரீராமஜெயம்
!!ஸ்ரீ:!!
श्री: श्रीमते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
வைகாசி ~ 10 ( 24.5.2026 ) ஞாயிற்றுக் கிழமை
வருடம் ~ பராபவ வருஷம் { பராபவ நாம சம்வத்ஸரம் }
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ வஸந்த ருது.
மாதம்~ வைகாசி மாஸம் { வ்ருஷப மாஸம் }
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி~ காலை 9.59 am வரை அஷ்டமி பின் நவமி.
நாள் ~ பானு வாஸரம் ( ஞாயிற்றுக்கிழமை )
நட்சத்திரம் ~ காலை 7.20 am வரை மகம் பின் பூரம்.
யோகம் ~ வியாகாதம்.
கரணம் ~ பவம் / பாலவம்.
அமிர்தாதியோகம் ~ அசுபயோகம் / அசுபயோகம்
ராகு காலம்~ மாலை 4.30~ 6.00.
எமகண்டம் ~ மதியம் 12.00 ~ 1.30.
குளிகை ~ மாலை 3.00 ~ 4.30.
நல்லநேரம் ~ 9.00 to 10.30 am & 3.00 to 4.30pm
சூரிய உதயம் ~. காலை 5.53
சந்திராஷ்டமம் ~ மகரம்.
சூலம் ~ மேற்கு.
பரிகாரம் ~ வெல்லம்.
ஸ்ரார்த்ததிதி ~ நவமி.
இன்று ~
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்.
!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः । गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
ஞாயிற்றுக்கிழமை ஹோரை
காலை
6-7. சூரியன். அசுபம்.
7-8. சுக்கிரன். சுபம்
8-9.. புதன். சுபம்
9-10.. சந்திரன். சுபம்
10-11. சனி.. அசுபம்
11-12. குரு. சுபம்
பிற்பகல்
12- 1. செவ்வா. அசுபம்
1-2. சூரியன். அசுபம்
2-3. சுக்கிரன். சுபம்
3-4. புதன். சுபம்
மாலை
4-5. சந்திரன்.சுபம்
5-6 சனி.. அசுபம்
6-7 குரு. சுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் - மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
இன்றைய (24-5-2026) ராசி பலன்கள்
மேஷம்
தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல்கள் அமையும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். கமிஷன் தொடர்பான பணிகளில் ஆதாயம் உண்டாகும். பணி நிமித்தமான செயல்களில் சற்று கவனம் வேண்டும். வாடிக்கையாளர்களின் ரசனைகளை புரிந்து கொள்வீர்கள். மனதளவில் புதுமையான சிந்தனைகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
அஸ்வினி : பிரார்த்தனைகள் நிறைவேறும்.
பரணி : கவனம் வேண்டும்.
கிருத்திகை : சிந்தனைகள் அதிகரிக்கும்.
ரிஷபம்
வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். நண்பர்கள் வழியில் குதூகலமான சூழல்கள் ஏற்படும். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். தாய் வழியில் அனுசரித்து செல்லவும். நிலுவையில் இருந்த சரக்குகள் விற்பனையாகும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்
கிருத்திகை : செலவுகள் ஏற்படும்.
ரோகிணி : அனுசரித்து செல்லவும்.
மிருகசீரிஷம் : முடிவுகள் கிடைக்கும்.
மிதுனம்
மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். திடீர் பயணங்களால் உற்சாகம் உண்டாகும். கலைத்துறையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். வரவுகளில் இருந்த தாமதங்கள் மறையும். விவசாயத்தில் மேன்மையான உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மிருகசீரிஷம் : தன்னம்பிக்கை பிறக்கும்.
திருவாதிரை : புரிதல்கள் அதிகரிக்கும்.
புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.
கடகம்
கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். விலகி சென்றவர்கள் பற்றிய சிந்தனைகள் மனதில் மேம்படும். மனை விற்றல், வாங்கலில் ஆதாயம் உண்டாகும். குழந்தைகள் வழியில் அனுசரித்து செல்லவும். எண்ணங்களில் இருந்த குழப்பங்கள் விலகி தெளிவுகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
புனர்பூசம் : நெருக்கம் மேம்படும்.
பூசம் : ஆதாயம் உண்டாகும்.
ஆயில்யம் : தெளிவுகள் உண்டாகும்.
சிம்மம்
கால்நடை விஷயங்களில் ஆதாயம் ஏற்படும். வெளியூர் தொடர்பான வணிகத்தில் முன்னேற்றம் உண்டாகும். தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். கடன் செயல்களில் சிந்தித்து செயல்படவும். சமூகப் பணிகளில் வித்தியாசமான வாய்ப்புகள் ஏற்படும். இணையம் சார்ந்த துறைகளில் அனுபவம் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
மகம் : ஆதாயம் ஏற்படும்.
பூரம் : சிந்தித்து செயல்படவும்.
உத்திரம் : அனுபவம் மேம்படும்.
கன்னி
ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வித்தியாசமான சில பயணங்களால் மனதில் மாற்றம் ஏற்படும். பணிவான பேச்சுகள் தேவையற்ற பகைமையை தவிர்க்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
உத்திரம் : ஆர்வம் ஏற்படும்.
அஸ்தம் : மாற்றம் ஏற்படும்.
சித்திரை : நெருக்கடிகள் உண்டாகும்.
துலாம்
கணவன் மனைவிக்கிடையே இருந்த வேறுபாடுகள் நீங்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார பணிகளில் மேன்மை உண்டாகும். உடன் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகப் பணிகளில் எண்ணங்கள் ஈடேறும். விரும்பியதை வாங்கி மகிழ்வீர்கள். தன வரவுகளால் சேமிப்புகள் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு நிறம்
சித்திரை : வேறுபாடுகள் நீங்கும்.
சுவாதி : மேன்மை உண்டாகும்.
விசாகம் : சேமிப்புகள் மேம்படும்.
விருச்சிகம்
உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். வீடு புதுப்பிப்பது சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்க்கவும். திடீர் வரவுகள் உண்டாகும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். புதிய வியாபாரம் குறித்த எண்ணங்கள் மேம்படும். எதிர்காலம் தொடர்பான புரிதல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
விசாகம் : ஆதாயம் உண்டாகும்.
அனுஷம் : வரவுகள் உண்டாகும்.
கேட்டை : புரிதல் உண்டாகும்.
தனுசு
புதிய முயற்சிகளில் ஒத்துழைப்பு உண்டாகும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். மனை சார்ந்த செயல்களில் பொறுமை வேண்டும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். பெருந்தன்மையான செயல்பாடுகளால் மதிப்புகள் அதிகரிக்கும். தந்தை வழி உறவுகளால் ஒத்துழைப்புகள் ஏற்படும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
மூலம் : ஒத்துழைப்பு உண்டாகும்.
பூராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
உத்திராடம் : ஆர்வம் ஏற்படும்.
மகரம்
பயனற்ற சிந்தனைகளை தவிர்க்கவும். எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். விவசாயத் துறைகளில் பொறுமை வேண்டும். வெளியூர் பயணங்களில் மாற்றம் ஏற்படும். புதிய முதலீடுகளை தவிர்க்கவும். மற்றவர்களின் செயல்களில் தவறாமல் இருப்பது நல்லது. வேலையாட்களிடம் அனுசரித்து செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம்
உத்திராடம் : செலவுகள் உண்டாகும்.
திருவோணம் : பொறுமை வேண்டும்.
அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.
கும்பம்
எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைக்கூடும். கணவன் மனைவி கிடையே நெருக்கம் உண்டாகும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். போட்டிகளில் ஈடுபட்டு திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அவிட்டம் : தெளிவுகள் பிறக்கும்.
சதயம் : எண்ணங்கள் கைக்கூடும்.
பூரட்டாதி : திறமைகள் வெளிப்படும்.
மீனம்
உத்தியோகப் பணிகளில் தெளிவுகள் ஏற்படும். நெருக்கமானவர்களின் வருகையால் உற்சாகம் உண்டாகும். கடன் பிரச்சினைகள் குறையும். கால்நடைகள் மீது ஆர்வம் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். நீண்ட நாள் பயணங்கள் கைகூடும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் சாதகமாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம்
பூரட்டாதி : தெளிவுகள் ஏற்படும்.
உத்திரட்டாதி : ஆர்வம் ஏற்படும்.
ரேவதி : ஒப்பந்தங்கள் சாதகமாகும்.
தினம் ஒரு திருக்குறள்
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல். (குறள் 894)
பரிமேலழகர் உரை:
ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல் - மூவகை ஆற்றலும்உடையார்க்கு அவை இல்லாதார் தாம் முற்பட்டு இன்னாதவற்றைச் செய்தல்; கூற்றத்தைக் கையால் விளித்தற்று - தானேயும் வரற்பாலனாய கூற்றுவனை அதற்கு முன்னே கைகாட்டி அழைத்தால ஒக்கும். (கையால் விளித்தல் -இகழ்ச்சிக் குறிப்பிற்று. தாமேயும் உயிர்முதலியகோடற்கு உரியாரை அதற்குமுன்னே விரைந்து தம்மேல் வருவித்துக்கொள்வார் இறப்பினது உண்மையும் அண்மையும் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் வேந்தரைப் பிழைத்தலின் குற்றம் கூறப்பட்டது.).
ALSO READ:ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!
மணக்குடவர் உரை:
வலியுடையார்க்கு வலியில்லாதார் இன்னாதவற்றைச் செய்தல், தம்மைக் கொல்லும் கூற்றத்தைக் கைகாட்டி அழைத்தாற் போலும்.
மு.வரதராசனார் உரை:
ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், தானே வந்து அழிக்க வல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது.
தினம் ஒரு திருமுறை
மறை - 2 | பதிகம் - 64 | பாடல் - 8
வாசங் கமழும் பொழில்சூ ழிலங்கை வாழ்வேந்தை
நாசஞ் செய்த நங்கள் பெருமா னமர்கோயில்
பூசைசெய்து வடியார் நின்று புகழ்ந்தேத்த
மூசி வண்டு பாடுஞ் சோலை முதுகுன்றே
விளக்கவுரை
மணம் கமழும் பொழில் சூழ்ந்த இலங்கை வாழ் வேந்தனாகிய இராவணனின் வலிமையை அழித்த நம்பெருமான் அமர்கின்ற கோயில், அடியவர் பூசை செய்து நின்று புகழ்ந்து போற்ற விளங்குவதும், வண்டுகள் மொய்த்துப்பாடும் சோலைகளை உடையதுமான முதுகுன்றாகும்
தினம் ஒரு திவ்யப் பிரபந்தம்
மோடியோடி லச்சையாய சாபமெய்தி முக்கணான்
கூடுசேனை மக்களோடு கொண்டுமண்டி வெஞ்சமத்
தோடவாண னாயிரம் கரங்கழித்த வாதிமால்
பீடுகோயில் கூடுநீர ரங்கமென்ற பேரதே.
- திருச்சந்த விருத்தம் திருமொழி - 6 (804)
விளக்கம் : காளியும் வெட்கத்தை விளைப்பதான சாபத்தையடைந்த ருத்ரனும் ஸ்வஜனங்களோடு திரண்ட ஸேனையை அழைத்துக்கொண்டு பயங்கரமான போர்க்களத்திலிருந்து வேகமாக ஓடிப்போன வளவிலே பாணாஸுரனது ஆயிரம் கைகளைஅறித்தொழித்த பரம புருஷனுடைய பெருமைதங்கிய கோயில் காவேரியோடு கூடின திருவரங்கமென்னும் திருநாமமுடையதாம்.
நன்னம்பிக்கை மொழி!
- எல்லாமே போய்விட்டதென கவலைப் படாதே, உன்னிடம் எவராலும் வெல்ல முடியாத, உள்ளம் உண்டு, மறவாதே!
- நீ கவலைப் படுவதாலோ, வேதனை படுவதாலோ, உன் வாழ்கையில், எந்த மாற்றமும் வந்துவிட போவதில்லை!!
- பணக்காரனை பார்த்து, பொறாமைப் படுவதைவிட, படுத்ததும் தூங்குபவனை பார்த்து, பொறாமை படு, ஏன்னா அது தான் சந்தோசமான வாழ்க்கை!!!
- வாழ்க்கையில் வரும் சங்கடங்கள், உன்னை அழிக்க வரவில்லை, உன் மன வலிமை மற்றும் திறமையை வெளி படுத்த, ஒரு அரிய வாய்ப்பு, அவ்வளவே!
- ஒரு காலத்தில், நேர்மை தவறாமல், வாழ்ந்தவர்களைதான் பார்த்தோம், ஆனால் இப்போதெல்லாம், நேரத்திற்கு தகுந்தாற்போல் வாழ்பவர்களே அதிகம்!!
- ஏணிக்கு சாய்ந்து கொள்ள, சுவர் தேவை, தோணிக்கு பாய்ந்து செல்ல, கடல் தேவை , வாழ்க்கையில் நீ ஜெயிக்க, உனக்கு சில, நல்ல உறவுகளும், நண்பர்களும் தேவை!!!
