Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பாரதி சிந்து

பாரதி சிந்து

— பத்மன் —

பாரதி சிந்து

பாட்டாலே வையத்தைப் பாலிக்க வந்ததோர்
தலைவன் - தங்கத் தலைவன் - தம்
ஏட்டாலே தீயவர் கூட்டத்தை ஓட்டிய
புலவன் - சிங்கப் புலவன் - அவன்
பதந்தொட்டு பண்பான நெறிபட்டு என்றுமே
வாழ்வோம் - மண்ணில் வாழ்வோம் - மிக்க
இடர்பட்டு நொந்தாலும் இன்னலால் வெந்தாலும்
வீழோம் - நாங்கள் வீழோம் - அந்தத்
தலைவன்தான் தங்கத் தலைவன்தான் சிங்கப்
புலவன்தான் - அவன் யாரு?
பாரதி பாரதி பாரதி பாரதி
பேரு - அவன் பேரு.நாட்டின்மேல் பாசத்தை நன்றாக வைத்திடச்
செய்தான் - நம்மைச் செய்தான் - நம்ம
வீட்டிலும் வெளியிலும் பெண்களைப் போற்றிடச் .
செய்தான் - நன்மை செய்தான் - அவன்
பேச்சாலும் மூச்சாலும் தமிழ்மொழி ஒங்கிடச்
செய்தான் - தவம் செய்தான் - அவன்
எழுத்தாலும் கருத்தாலும் தீமைகள் நீங்கிடச்
செய்தான் - விதி செய்தான் - அந்தத்
தலைவன்தான் தங்கத் தலைவன்தான் சிங்கப்
புலவன்தான் - அவன் யாரு?
பாரதி பாரதி பாரதி பாரதி
பேரு - அவன் பேரு.தூக்கத்தில் மூழ்கிய பாரதம் எழுப்பிய
தீரன் - கவிதை வீரன் - நல்ல
ஆக்கத்தில் நம்மவர் சிந்தை செலுத்திய
ஆர்யன் - சுத்த வீர்யன் - கெட்ட .
வேற்றுமை பேசியே கெடுதிகள் செய்வோர்க்கு
காலன் - காக்கும் வேலன் - மக்கள்
ஒற்றுமை ஓங்கவே தம்வாழ்வைத் தந்திட்ட
நேசன் - சக்தி தாசன் -அந்தத்
தலைவன்தான் தங்கத் தலைவன்தான் சிங்கப்
புலவன்தான் - அவன் யாரு?
பாரதி பாரதி பாரதி பாரதி
பேரு - அவன் பேரு.

மானசீக குருநாதர் மகாகவி பாரதியின் நினைவுநாளை ஒட்டி எனது கவிதாஞ்சலி.

ALSO READ:உசிலம்பட்டி, தாராப்பட்டி பகுதி கோயில்களில் கும்பாபிஷேகம்!

தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal AdminSee Full Bio

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari