Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024: 14ம் நாளில்.!

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024: 14ம் நாளில்.!

paris olympics 2024

பாரீஸ் ஒலிம்பிக் 2024 - பதிநாலாம் நாள் - 09.08.2024

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஆகஸ்ட் 9 ஆம் தேதி, இந்திய தடகள வீரர்கள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 4×400 மீ தொடர் ஓட்டம் மற்றும் ஃப்ரீஸ்டைல் ​​மல்யுத்தத்தில் விளையாடுவார்கள்.

கோல்ஃப்

பெண்களுக்கான தனிப்பட்ட ஸ்ட்ரோக் விளையாட்டு சுற்று 3 - திக்ஷா தாகர், அதிதி அசோக் இருவருக்கும் இன்றைய நாள் நல்ல நாளாக அமையவில்லை.

தடகளம்

பெண்களுக்கான 4×400 மீ தொடர் ஓட்டம் 1 - ஜோதிகா ஸ்ரீ தண்டி, சுபா வெங்கடேசன், வித்யா ராம்ராஜ், பூவம்மா எம்.ஆர். பெண்கள் அணி 3:32:51 நேரத்தில் 4 x400 மீ ஓட்டத்தை ஓடி ஹீட் இரண்டில் எட்டாம் இடம் பிடித்தார்கள்.

ஆண்களுக்கான 4×400 மீ தொடர் ஓட்டம் 1 - முஹம்மது அனஸ், முகமது அஜ்மல், அமோஜ் ஜேக்கப், சந்தோஷ் தமிழரசன், ராஜேஷ் ரமேஷ். ஆண்கள் அணி 3:00:58 நேரத்தில் தங்களது 4×400 மீ ஓட்டத்தை ஓடி முடித்தார்கள். இது அவர்களது சிறப்பான சாதனை நேரம். ஆனால் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறவில்லை.

ALSO READ:அமெரிக்காவின் 47வது அதிபர் ஆனார் ட்ரம்ப்; பெரும்பான்மை பெற்று சாதனை! மோடி வாழ்த்து!

மல்யுத்தம்

ஆண்கள் ஃப்ரீஸ்டைல் ​​57 கிலோ வெண்கலப் பதக்கப் போட்டி - அமன் செஹ்ராவத் vs டேரியன் டோய் குரூஸ் (புவேர்ட்டோ ரிக்கோ) இரவு 2145க்கு நடக்கவுள்ளது.

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் KVB

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari