Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

லிட்டருக்கு ரூ.13ஆக இருந்த பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.3ஆக குறைக்கப்பட்டுள்ளது. லிட்டருக்கு 10 ரூபாயாக இருந்த டீசல் மீதான கலால் வரி முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.

இந்தக் கல்லால் வரி நீக்கத்தால் சில்லறை வர்த்தகத்தில் பெட்ரோல் - டீசல் விலை குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை; அதே நேரம் இது விலை உயர்வை தடுக்கும் நடவடிக்கையாகும். எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வருவதை தடுக்கும் முயற்சியாக இந்த கலால் வரி குறைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தனது கருத்தை தெரிவித்த பாஜக., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி,

'பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கூடுதல் கலால் வரியில் ரூபாய் 10 குறைத்துள்ளது இந்திய அரசு. ஈரான் போரினால் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலையினால் வாடிக்கையாளர்களுக்கான பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்கும், அரசியல் செய்யலாம், மத்திய அரசை விமர்சிக்கலாம் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சில அரசியல் சந்தர்ப்பவாதிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்ததோடு, விலை ஏற்றம் என்கிற சுமையை மக்களிடம் திணிக்காமல் மத்திய அரசே தாங்கிக் கொண்டுள்ளது.

இதுவே வல்லரசு! நரேந்திர மோடியின் நல்லரசு!' என்று குறிப்பிட்டுள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari