Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

ல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

'தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்' என்று அன்போடு அழைக்கப்படுபவர் எஸ்.ஜானகி (88). இவர், ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் பிறந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட 17 மொழிகளில் பாடல்களை பாடியவர் ஜானகி. 17 மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ். ஜானகி அவர்களின் மறைவிற்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் ஆழ்ந்த இரங்கல் செய்தி : பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ். ஜானகி அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, தனது இனிமையான குரலாலும், உணர்வுபூர்வமான இசை வெளிப்பாட்டாலும் பல தலைமுறை மக்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்தவர். இந்திய இசை உலகிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு என்றென்றும் நிலைத்திருக்கும். அன்னாரின் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், இசை ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

ALSO READ:ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari