Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
எம்.எல்.ஏ., இல்ல விழாவில் டிடிவி தினகரன், ஓபிஎஸ்., இணைந்து பங்கேற்பு!

எம்.எல்.ஏ., இல்ல விழாவில் டிடிவி தினகரன், ஓபிஎஸ்., இணைந்து பங்கேற்பு!

ops ttv in a function

இல்ல திறப்பு விழா: ஓபிஎஸ், தினகரன் பங்கேற்பு

உசிலம்பட்டி அருகே, உசிலம்பட்டி எம்.எல்.ஏ.

இல்ல திறப்பு விழாவில் முன்னாள் முதல்வர் ஒபிஎஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இணைந்து பங்கேற்று வாழ்த்தினர்.,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆ.கொக்குளம் கிராமத்தில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி.அய்யப்பன் இல்ல திறப்பு விழா இன்று நடைபெற்றது.

இந்த திறப்பு விழாவில், முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இணைந்து பங்கேற்றனர்.
விழாவிற்கு வந்த ஒபிஎஸ், டிடிவி தினகரனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இல்ல திறப்பு விழாவில், ஒபிஎஸ், டிடிவி தினகரன் இணைந்து குத்துவிளக்கு ஏற்றி வைத்து வாழ்த்தினர்.

தொடர்ந்து, இருவருக்கும் மீனாட்சியம்மன் சிலைகள் பரிசாக வழங்கப்பட்டது. டிடிவி தினகரனுக்கு எம்எல்ஏ சார்பில் ஒபிஎஸ் பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தார்.

ரவிச்சந்திரன், மதுரை

See Full BioALSO READ:பழநி கோயிலுக்கு நீதிமன்றத்தால் ... ஒரே வருடத்தில் ஒன்றரை கோடி ரூபாய் வசூல்!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari