Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

லகக் கோப்பை கால்பந்து போட்டி -2026முதல் செமி ஃபைனல் - பிரான்ஸை ஸ்பெயின் அணி வென்றது

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டம் 14 ஜூலை 2026 அன்று ஆர்லிங்க்டனில் நடந்தது. ஒருபுறம் இந்த உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்த விரான்சு அணி, மறுபுறம் எதிர் அணிகள் தனக்கு எதிராக ஒரே ஒரு கோலை மட்டும் அடிக்குமஆறு பார்த்துக்கொண்ட ஸ்பெயின் அணி. ஃபிரான்சு அணியில் எம்பாபே போன்ற சுறுசுறுப்பாக கோல் அடிக்கும் வீரர்கள். ஆனால் ஸ்பெயின் அணியின் சிறப்பான தடுத்தாடும் குழு. என்வே ஒரு சிறப்பான கால்பந்து ஆட்டத்தை அனைவருமே அதிர்பார்த்தனர்.

தொடக்கம் முதலே ஸ்பெயின் அணி ஆதிக்கம் செலுத்தியது. அவர்களுன் தாகுதல் வியூகம், தடுப்பாட்டம் என அனைத்திலும் ஒரு கட்டுக்கோப்பு இருந்தது. பிரான்சு அணியின், இந்த கோப்பை முழுவதிலும் கோல் மழை பொழிந்த எம்பாபே, மைக்கேல் ஒலிஸ் ஆகியோரால் இந்தத் தடுப்பாட்ட அரணை உடைக்கமுடியவில்லை.

ஆட்டத்தின் 22ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் லமைன் யமால் பிரான்சு அணியின் பாக்சிற்குள் ஊடுருவியபோது பவுல் செய்யப்பட்டார். இதனால் ஸ்பெயினுக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனை அந்த அணியின் மைக்கேல் ஒயர்சால் சரியாகப் ப்யன்படுத்தி கோல் அடித்தார். இரண்டாவது பாதியில், 58ஆவது நிமிடத்தில், ஒரு அற்புதமான பாஸை டேனி ஒமால் இடமிருந்து பெற்று, பெட்ரோ போரோ கோலாக மாற்றினார்.

ALSO READ:விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

அதன் பின்னர் பிரான்சு அணியால் கோல் போட முடியவில்லை. அதனால் ஸ்பெயின் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. 16 ஆண்டுகளுக்குப் பிறகு, ஸ்பெயின் அணி இறுதி ஆட்டத்திற்கு முன்னேரியிருக்கிறது.

இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari