Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

உலகக் கோப்பை கால்பந்துப்போட்டி 2026ரவுண்ட் 16 முதல் நாலு ஆட்டங்கள்

பிரேசில் அதிர்ச்சித் தோல்வி

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

காலிறுதிக்கு முந்தைய சுற்று ஜூலை 4ஆம் தேதி தொடங்கியது. முதல் கனடா, மொராக்கோ இடையே ஹூஸ்டனில் நடைபெற்றது. இதில் மொராக்கோ அணி கனடா அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது. மொராக்கொ அணியின் ஔனாதி 50 நிமிடத்திலும் 82 ஆவது நிமிடத்திலும் இரண்டு கோல்கள் அடித்து அசத்தினார். 98ஆவது நிமிடத்தில் ரஹ்மி ஒரு கோல் அடித்தார். இதன் மூலம் மொராக்கோ காலிறுதிக்கு முன்னேறியது.

அதே தினம் பிலடெல்பியாவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் பாராகுவே அணியும் ஃபிரான்சு அணியும் மோதின. ஃபிரான்சு அணியின் முன்னனி ஆட்டக்காரர் மபாபே யொ நிமிடத்தில் பெனால்டி கிக் மூலமாக அந்த அணி ஒரு கோல் அடித்தது. இதன் மூலம் ஃபிரான்சு அணி வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

மூன்றாவது ஆட்டம் கிழக்கு ரூதர்ஃபோர்டு, மெட்லிஃபெ மைதானத்தில், ஜூலை 5ஆம் நாள், பிரேசில் நார்வே அணியிடம் 1-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது. பிரேசில் அணியின் நெய்மர் 100ஆவது நிமிடத்தில் ஒரு பெனால்டி கிக் மூலம் ஒரு கோல் அடித்தார். ஆனால் நார்வே அணி 70ஆவது நிமிடத்திலும், 90ஆவது நிமிடத்திலும் இரண்டு கோல்கள் அடித்திருந்ததால் ஆட்டத்தில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது. நெய்மர் கண்ணீருடன் தான் கால்பந்து ஆட்டங்களிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

ALSO READ:IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

அதே நாள் மெக்சிகோவில் நடந்த ஆட்டத்தில் மெக்சிகோ அணியும் இங்கிலாந்து அணியும் விளையாடின. இங்கிலாந்து அணி தோற்கவேண்டும் என்பதற்காக முதல் நாள் இரவு அந்த அணி தங்கியிருந்த ஹோட்டலுக்கு வெளியில் மெக்சிகோ அணியின் ரசிகர்கள் அதிக சத்தம் எழுப்பும் வகையில் ஆட்டம், பாட்டம் என ரகளை செய்தனர். ஆட்டத்தின்போதும் மெக்சிகோ அணி இங்கிலாந்து அணி வீரர்களை தாக்கும் வகையில் ஆடினர். இருந்தபோதிலும் இங்கிலாந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari