மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஹரிஜன ஆலயப்பிரவேச போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற தியாகி வைத்தியநாத ஐயர் பிறந்த தினத்தில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இதை முன்னிட்டு, உயரமான சுவரில் சிரமப்பட்டு வயதானவர்கள் ஏறி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அப்போது, திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்த உதவியாக, படிக்கட்டுகள் அமைத்துத் தர புதிய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
சுததிரப் போராட்ட கால கட்டத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஹரிஜன ஆலயப் பிரவேசம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தை நடத்திக் காட்டியவர் மதுரை வைத்யநாதய்யர். தாழ்த்தப்பட்டவர்கள் என அழைக்கப்பட்ட மக்களை ஆலயங்களுக்குள் அனுமதிக்க வேண்டும் என, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஆதரவோடு வைத்தியநாத அய்யர் போராட்டம் நடத்தி வெற்றிபெற்று கோவிலுக்குள் ஹரிஜன் மக்களை அழைத்து சென்றார்.
சட்டமும் இயற்றப்பட்டது அதோடு தமிழகத்தின் முக்கிய சுதந்திர போராட்டங்களான உப்பு சத்தியாகிரகம், கள்ளுக்கடை மறியல் போன்ற முக்கிய போராட்டங்களில் பங்கேற்று வைத்தியநாத ஐயரும் அவரது குடும்பமும் பல முறை தேசத்திற்காக சிறை சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ALSO READ:மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..
அவரின் பிறந்த தினத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள தியாகி வைத்தியநாத ஐயர் திருவுருவ சிலைக்கு அனுஷத்தின் அனுகிரக நிறுவனர் நெல்லை பாலு, உக்கிர பாண்டி பட்டர், தன்னார்வலர் மற்றும் தாம்பிராஸ் மாநிலத் துணைத் தலைவர் இல.அமுதன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
வைத்தியநாத ஐயரின் திருவருவ சிலை ஆக்கிரமிப்பு பிடியில் சிக்கி உள்ளதால் அவரது சிலைக்கு மாலை அணிவிக்க தன்னார்வலர்கள் மிகவும் சிரமப்பட்டு சுவர் ஏறி குதித்து சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தன்னார்வலர்கள் வைக்கும் வேண்டுகோள் உடனடியாக, ஆக்கிரமிப்பின் பிடியில் இருக்கும் வைத்தியநாத ஐயர் சிலை அமைந்த பகுதி முழுவதும் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு சிலைக்கு செல்ல படி அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டிற்காக பல போராட்டாங்கள் நடத்திய தியாகியின் சிலைக்கு செல்ல முடியாமல் ஆக்கிரமித்துள்ள இடம் சீரமைக்கப்பட்டு புதிதாக பொறுப்பேற்றுள்ள இந்த அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்தனர்.
ALSO READ:தமிழக வளர்ச்சிக்கு பாஜக - அதிமுக கூட்டணி அவசியம்-சரத்குமார் ..
