Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

இக்கணம் - தேவை சிக்கனம்!

#image_title

த்திய கிழக்கில் போர் ஏற்பட்டதில் இருந்தே உலகின் பல நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது…

இந்தியாவிலும் கடந்த வாரம் LPG விலை வீடு மற்றும் வர்த்தக சிலிண்டர் முறையே ₹60 மற்றும் ₹115 உயர்த்தப்பட்டது…

பெட்ரோல் டீசலை பொறுத்தவரை இந்தியாவில் 2014க்கு முன்பு 2 வாரங்களுக்கு தேவையான அளவுக்கு கையிருப்பு வைக்கப்படிருந்தது..

இந்த 10 ஆண்டுகளில் நிலத்தடி கிடங்குகள் பெருமளவில் கட்டப்பட்டு விசாகப்பட்டினம், மங்களூர், பாடூர் உள்ளிட்ட இடங்களில் கிட்டத்தட்ட 74 நாட்களுக்கு தேவையான அளவுக்கு கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது…

ரஷ்யாவில் இருந்து குரூட் வரத்து அதிகரிக்க தொடங்கியிருப்பதால் பெட்ரோல் டீசலுக்கு இப்போதைக்கு ஆபத்தில்லை… ஆனால் எரிவாயு தட்டுப்பாடு தலை தூக்கத் தொடங்கியுள்ளது…

கடந்த ஏழேட்டு ஆண்டுகளாக தட்டுப்பாடு இன்றி பதிவு செய்யப்பட்டு அடுத்த நாளே விநியோகம் செய்யப்பட்டு வந்த வீட்டு உபயோக சிலிண்டர்கள் தற்போது ஒரு வாரம் வரை தாமதமாகிறது…

போர் இன்னும் நீளும் வாய்ப்புகளே அதிகம் இருக்கிறது… ஆதலால் நாடு முழுவதும் LPG தட்டுப்பாடு வரும் நாட்களில் அதிகரிக்கலாம்…

அதற்காக உடனே பதட்டமடைந்து… 'சென்னையில் மழை பெய்யும்' என்று அறிவிக்கப்பட்ட உடனேயே சூப்பர் மார்க்கெட்டுகளுக்குள் புகுந்து பிரட் பாக்கெட், பால் பாக்கெட், சேமியா பாக்கெட் எல்லாவற்றையும் காசு கொடுத்து மொத்தமாக சூரையாடி கொண்டு வந்து வீட்டுக்குள் சேர்த்து வைக்கும் சென்னையன்ஸ் போல.. உடனடியாக வீடுகளில் LPG சிலிண்டர்களை புக் பண்ணி குவிக்க வேண்டாம்…

வீடுகளில் கேன்களில் பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை வாங்கி குவித்து வைக்க வேண்டாம்… கடுமையான வெயில் காலத்தில் அது ஆபத்தானது…

முடிந்தவரை இந்த போர் சூழ்நிலை மாறும் வரை கேஸ் பயன்பாட்டை எப்படியெல்லாம் குறைக்கலாம் என்று யோசித்து செயல்பட்டால் எல்லோருக்கும் நல்லது…

முடிந்தவரை கேஸ் அடுப்புக்கு பதில் இண்டக் ஷன் ஸ்டவ், எலக்ட்ரிக் கெட்டில், மைக்ரோ வேவ் ஓவன், OTG போன்றவற்றை பயன்படுத்தி சமையல் வேலைகளை செய்யலாம்..

அதே போல பக்கத்தில் இருக்கும் கடைகள், டியூசன் செண்டர், வங்கி, வழிபாட்டு தளங்கள் ஆகியவற்றுக்கு போவதற்கு கார், பைக் எடுப்பதற்கு பதில் சைக்கிளில் போக தொடங்கலாம் அல்லது நடந்து போகலாம்… செலவு குறைவு.. உடல் ஆரோக்கியதுக்கும் நல்லது, காற்று மாசும் குறையும்…

வீட்டில் ஒவ்வொருவரும் தனித்தனி வாகனங்களை பயன்படுத்து வதையும் அவசியம் குறைக்கலாம்…

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari