Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
இலவச பாஸை ரூ.500க்கு விற்று கல்லா கட்டிய கும்பல்!

இலவச பாஸை ரூ.500க்கு விற்று கல்லா கட்டிய கும்பல்!

free pass sold out of rs 500

சென்னை அருகே உள்ள சாய்ராம் கல்லூரியில் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்பட ப்ரமோஷன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது ..

நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ரசிகர்களுக்கு இலவச அனுமதி பாஸ் வழங்கப்பட்டது. ஆனால் வழங்கப்பட்ட இலவச அனுமதி நுழைவு பாஸ்ஸை சில கும்பல் 500 ரூபாய் வரை விற்று கள்லா கட்டிய நபர்களின் வீடியோ வெளியாகி உள்ளது

தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருந்துவருபவர் அல்லு அர்ஜுன் இவரது நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற படம் 'புஷ்பா தி ரைஸ்' இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இதன் இரண்டாம் பாகமாக 'புஷ்பா 2 தி ரூல்' படம் உருவாகியுள்ளது.

இந்த திரைப்படத்தின் பிரமோஷன் தாம்பரம் அடுத்த சோமங்கலம் பகுதியில் உள்ள சாய்ராம் தனியார் கல்லூரியில் நடைபெற்றது…

ரசிகர்கள் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு கோல்ட் , சில்வர் என பல்வேறு பெரியோர்களாக அனுமதிச்சீட்டு இலவசமாக வழங்கப்பட்டது.

ALSO READ:'நிமுசுலைடு' மாத்திரைகளை குழந்தைகளுக்கு பரிந்துரைக்க தடை!

ஆனால் ஒரு கும்பல் இலவசமாக வழங்கப்பட்ட டிக்கெட்டை இசை வெளியீட்டு நிகழ்ச்சியை பார்க்க வந்தவர்களுக்கு 500 ரூபாய் வரை விற்று கல்லா கட்டிய வீடியோ தான் தற்போது வெளியாகியுள்ளது.

ஆனந்தகுமார்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari