Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கார்த்திகை முதல் நாள்; சபரிமலை பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடக்கம்! - தினசரி

கார்த்திகை முதல் நாள்; சபரிமலை பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடக்கம்! - தினசரி

கார்த்திகை முதல் நாள் தொடங்கியதை முன்னிட்டு, இன்று காலை முதலே சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் அருகில் உள்ள கோயில்களில் குவிந்தனர்.

தமிழகம் முழுதும், தங்கள் பகுதியில் இருக்கும் கோயில்களுக்கு அதிகாலை முதலே சென்ற பக்தர்கள், ஐயப்பனைக் காண விரதம் இருக்க மாலை அணிந்து கொண்டனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து தங்கள் விரதத்தை துவக்கினர்.

இதற்காக அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்ட நிலையில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்தனர். அங்கு ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது தொடர்ந்து விரதம் இருக்கும் ஐயப்ப பக்தர்கள் அனைவரும் மாலை அணிவித்து விரதத்தை துவக்கினர்.

சிவாச்சாரியார் கண்ணன் என்ற பரசுராமன் பக்தர்களுக்கு மாலை அணிவித்தார். பின்பு ஐயப்பனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்று பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. தென்கரை முள்ளிப்பள்ளம் சோழவந்தான் மன்னாடிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினர்.

முதல் முறையாக சபரிமலை செல்லும் கன்னி சாமிகளும் மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினர் இதே போல் சோழவந்தான் மற்றும் விக்கிரமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள ஐயப்பன் கோவில்களிலும் சபரிமலை செல்லும் பக்தர்கள் அதிகாலை முதல் மாலை அணிவித்து சென்றனர்.

Posts by ரவிச்சந்திரன், மதுரை:

கார்த்திகை முதல் நாள் தொடங்கியதை முன்னிட்டு, இன்று காலை முதலே சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் அருகில் உள்ள கோயில்களில் குவிந்தனர். தமிழகம் முழுதும், தங்கள் பகுதியில் இருக்கும் கோயில்களுக்கு அதிகாலை முதலே சென்ற பக்தர்கள், ஐயப்பனைக் காண விரதம் இருக்க மாலை அணிந்து கொண்டனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari