Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மதுரை கோயில் கும்பாபிஷேகம்; நெல்லையில் இருந்து தென்காசி வழி சிறப்பு ரயில்!

மதுரை கோயில் கும்பாபிஷேகம்; நெல்லையில் இருந்து தென்காசி வழி சிறப்பு ரயில்!

#image_title

துரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிசேக சிறப்பு ரயில் நெல்லை தென்காசி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பக்தர்கள் பயன்பெறும் வகையில் தென்காசி ராஜபாளையம் வழியாக திருநெல்வேலி - கூடல் நகர் கும்பாபிசேக சிறப்பு ரயில்(06001/06002) புதன் வியாழன் இயக்கப்படும்.

திருநெல்வேலி-கூடல் நகர் சிறப்பு இரயில்(06001)
16.09.26/புதன்கிழமை
திருநெல்வேலியில் புறப்பாடு பகல் 1மணிக்கு புறப்படும்.
மதுரை வருகை: 17:45
கூடல் நகர் வருகை: 18:30

கூடல் நகர்-திருநெல்வேலி சிறப்பு இரயில்(06001)
17.09.26/வியாழன்
கூடல் நகர் 12:15
மதுரை புறப்பாடு: 12:4
திருநெல்வேலி வருகை: 17:50

மதுரை மீனாட்சி அம்மன் கும்பாபிசேகப் பெருவிழாவிற்கு செல்ல விரும்பும் பக்தர்கள் வசதிக்காக தென்னக ரயில்வே இந்தச் சிறப்பு இரயில் சேவையை இயக்குகிறது.

இராமேஸ்வரம்- பழனி
வழி : மண்டபம் இராமநாதபுரம் பரமக்குடி மானாமதுரை திருப்புவனம் மதுரை சோழவந்தான் கொடைக்கானல்-ரோடு திண்டுக்கல் அக்கரைப்பட்டி ஒட்டன்சத்திரம் சத்திரப்பட்டி வழியாக பழனிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும்.

ரயில் எண் 06780 - ராமேஸ்வரம் - பழனி
16.09.2026 அன்று, மாலை 4.55 க்கு ராமேஸ்வரத்தில் கிளம்பி, இரவு 7.45 க்கு மதுரை வந்து, இரவு 10.30க்கு பழனியை அடைகிறது.

ரயில் எண் 06779 - பழனி -ராமேஸ்வரம்
17.09.2026 அன்று மதியம் 2.20க்கு பழனியில் இருந்து புறப்பட்டு, மதுரைக்கு மாலை 4.20க்கு வந்து பின் இரவு 8.10க்கு ராமேஸ்வரம் சென்றடையும்.

17 வருடங்களுக்குப் பிறகு மதுரையில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது . இதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிய உள்ள நிலையில் சிறப்பு ரயில் சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari